நவராத்திரி : ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில், சுவாமி வேலு கோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சி.
கரூர் மேட்டு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு சுவாமி வேலு கோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
நவராத்திரி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மேட்டு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நவராத்திரி முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வேணு கோபாலகிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் மேட்டு தெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி நான்காம் நாள் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்மன் அலங்காரம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருகிறார். இந்நிலையில் நவராத்திரி நான்காம் நாளை முன்னிட்டு சுவாமி ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி பூஜித்தார்
பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலயத்தின் நடைபெற்ற நவராத்திரி நான்காம் நாள் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை இந்து அறநிலைத்துறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial