மேலும் அறிய
Mandous Cyclone: கொந்தளிக்கும் கடல்..சாய்ந்து கிடக்கும் மரங்கள்..சென்னையில் ஒரு காட்டு காட்டும் மாண்டஸ் புயல்!
Mandous Cyclone: மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வருவதையொட்டி, நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது.

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் மாண்டஸ் புயல்
1/11

சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது
2/11

13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து கொண்டு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
3/11

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காட்சியளிக்கிறது
4/11

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
5/11

மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
6/11

தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
7/11

தண்டையார் பேட்டை, பெரம்பூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் அதிக பட்ச மழை பதிவாகியுள்ளது
8/11

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலும் அதிக மழை பெய்யக்கூடும்
9/11

கன மழை மற்றும் பலத்த காற்றினால் சென்னை நங்கநல்லூர் சாலையில் முறிந்து விழுந்த மரம்
10/11

அதே போல புளியந்தோப்பு பகுதியிலும் நேற்று மரம் முறிந்து விழுந்தது
11/11

மாண்டஸ் புயல் விரைவில் கரையைக் கடக்கும் என்பதால், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Published at : 09 Dec 2022 10:35 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
பொழுதுபோக்கு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion