குழந்தைகளுக்கு பெயர் மாற்றும்போது மாட்டிக்கொண்ட மஸ்க்.. வெளியான தகவலால் அதிரும் சமூக வலைதளம்..!
உலகப்பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு அவரது நிறுவனத்தின் மூத்த அதிகாரி மூலமாக இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
![குழந்தைகளுக்கு பெயர் மாற்றும்போது மாட்டிக்கொண்ட மஸ்க்.. வெளியான தகவலால் அதிரும் சமூக வலைதளம்..! world number one billionaire elon musk has twin child with nuralink top executive shivon zillis goes viral in social media குழந்தைகளுக்கு பெயர் மாற்றும்போது மாட்டிக்கொண்ட மஸ்க்.. வெளியான தகவலால் அதிரும் சமூக வலைதளம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/14/cc1066f19937c81f20ee8a487c14b826_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகப் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு அவரது நிறுவனத்தின் மூத்த அதிகாரி மூலமாக இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது சமூகவலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
உயர் அதிகாரி மூலம் இரட்டைக் குழந்தைகள்:
உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓவாக இருந்து வருகிறார். எலான் மஸ்க்கின் நிறுவனங்களில் ஒன்றான நியூரா லிங்கின் உயர் அதிகாரியாக 36 வயதான ஷிவோன் ஸெல்லிஸ் பணியாற்றி வருகிறார். 36 வயதான இவர் கனடாவைச் சேர்ந்தவர். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூராலிங்க் நிறுவனத்தில் தான் உயர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் ஷில்லிஸ். நியூராலிங்கில் சேர்வதற்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பெயர் மாற்றும்போது மாட்டிக்கொண்ட மஸ்க்:
கனட எழுத்தாளரான ஜஸ்டின் வில்சனின் தகவல்படி கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ஷிவோன் ஸில்லிசுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததாகவும், அந்த இரட்டையர்களின் பெயர்களில் நடுப்பெயராக ஸில்லிஸின் பெயரும், கடைசிப் பெயராக மஸ்க்கின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த பெயரை மாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவின்போது இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை கைப்பற்றிய அமெரிக்க ஊடகங்கள் இது தொடர்பாக பரபரப்பாக விவாதித்து வருகின்றன. இந்த இரண்டு குழந்தைகளும் எலான் மஸ்க் மற்றும் க்ரிம்சுகும் இரண்டாவது குழந்தை வருவதற்கு முன்பு பிறந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவில் எக்ஸ்பர்ட்:
ஷிவோன் ஸில்லிஸ் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அண்டர் 30யிலும், லிங்க்ட் இன் அண்டர் 35 பட்டியலிலும் இடம்பெற்றவர். ஓப்பன் ஏஐ-ல் வேலை கிடைத்தபோது ஷிவோன் ஸெல்லிஸும் எலான் மஸ்க்கும் சந்தித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் பட்டம் பெற்றவரான ஷிவோன் ஸில்லிஸ் செயற்கை நுண்ணறிவில் வல்லவர். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் உறுப்பினராகவும் இருக்கிறார். இதனால், மஸ்க்கின் முன்னணி நிறுவனமான டெஸ்லாவில் நியமிக்கப்பட்டார்.
ட்விட்டரின் தலைமை ஷிவோன்?:
தற்போது, ட்விட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ள நிலையில், ட்விட்டரை தலைமைதாங்கும் பொறுப்பு ஸில்லிஸுக்கு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எலான் மஸ்க்கிற்கு க்ரிஃபின், விவியன் ஜென்னா, கை, சக்ஸான், டாமியன் உள்ளிட்ட 9 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)