மேலும் அறிய
Advertisement
இலங்கைக்கு இனி நிதி உதவிகள் கிடையாது - உலக வங்கி தெரிவித்தது என்ன?
இலங்கைக்கு மேலும் நிதி உதவிகளை வழங்கப் போவதில்லை உலக வங்கி அதிரடி அறிவிப்பு
இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் வேளையில், உலக வங்கி மற்றும் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகள், நிதி நிறுவனங்கள் நிதி உதவிகளை செய்து வந்தன.இந்நிலையில் தற்போது உலக வங்கி இலங்கைக்கு நிதி உதவிகளை செய்யப்போவதில்லை என அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இலங்கை சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக நாடுகளிடம் உதவி கோரிவரும் நிலையில் உலக வங்கி அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.இலங்கையில் நிலையான ,நீடித்த பொருளாதாரத்திற்கான திட்டத்தை அந்நாட்டு அரசு வகுக்கும் வரையில் இலங்கைக்கு தாம் உதவப்போவதில்லை என உலக வங்கி தெரிவித்திருக்கிறது.இருந்தபோதிலும் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உலக வங்கி உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளது.
மேலும் இலங்கையின் தற்போதைய மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கத்தால் மக்கள் படும் துன்பங்கள் போன்றவற்றைக் கண்டு தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சமையல் எரிவாயு ,மருந்துகள், உணவு, உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை போக்குவதற்கு தாம் முடிந்தளவு நிதி உதவிகள் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுவரையில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலங்கை மக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டிருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.தாம் இதுவரை வழங்கியுள்ள உதவிகள் இலங்கையில் உள்ள ஏழ்மையான ,மிகவும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் தாம் கவனம் கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது. உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ், தமது முகவர்களின் ஊடாக இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் சென்றடைகின்றனவா என்பது குறித்து தாம் ஆராய்ந்து வருவதாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போதைய இலங்கை அரசு துரிதமான பொருளாதாரக் கொள்கைகளை ,கட்டமைப்பை உருவாக்கும் வரை புதிய நிதி உதவிகள் எதையும் வழங்கப் போவதில்லை என உலக வங்கி அறிவித்திருக்கிறது.இலங்கைக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வந்த உலக வங்கி இவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது . குறிப்பாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வழங்கிய நிவாரண பொருட்கள் உரிய மக்களை சென்றடைகின்றனவா என்றொரு கேள்வியும் எழும்பி இருக்கிறது.
இந்நிலையில் உலக வங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து சலுகைகளும், நிவாரணங்களும் வழங்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.ஆகவே இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு நிவாரணங்களும் நிதி உதவிகளும் சென்றடைய வேண்டும் என்பதையும் உலக வங்கி கருத்தில் கொண்டிருப்பதை காண முடிகிறது. ஆகவே இலங்கை அரசு மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்களை வழங்கி, பொருளாதாரக் கொள்கையை சீர்படுத்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே உலக வங்கி உதவிகளை வழங்கும் என தெரிவித்திருக்கிறது.
தற்போதைய இலங்கை அரசு பதவியை பிடிப்பதிலும் , பதவியை தக்க வைத்துக் கொள்வதிலும் கட்சிக்கு கட்சி ஆதரவளிப்பதிலும், ஊழல் புரிந்தவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது. ஆயுத மற்றவர்களாக, நிராயுதபாணிகளாக, அகிம்சை வழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பழி வாங்கியது என அரசு மேற்கொள்ளும் அராஜக நடவடிக்கைகளை உலக நாடுகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன .
இந்நிலையில் இலங்கையின் அரசியல் கட்டமைப்பே இன்னும் சரி வராத நிலையில் உலக வங்கி நிதி உதவி வழங்குவதை நிறுத்தி இருக்கிறது. ஆக இலங்கையின் புதிய அரசு மீது உலக வங்கி நம்பிக்கை இழந்திருப்பது இதன் மூலம் அறிய முடிகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion