தவறுதலாக லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடிச்ச லக்கி ப்ரைஸ்! எவ்வளவு தெரியுமா?
தவறுதலாக லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு லக்கி ப்ரைஸ் அடித்திருக்கிறது. அதுவும் ஆயிரம், லட்சமெல்லாம் இல்லீங்க.. 10 மில்லியன் அமெரிக்க டாலர். இதைத்தான் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அதிர்ஷ்டம் என்பார்களோ!
தவறுதலாக லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு லக்கி ப்ரைஸ் அடித்திருக்கிறது. அதுவும் ஆயிரம், லட்சமெல்லாம் இல்லீங்க.. 10 மில்லியன் அமெரிக்க டாலர். இதைத்தான் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும் அதிர்ஷ்டம் என்பார்களோ!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரைச் சேர்ந்தவர் லாகுவெட்ரா எட்வர்ட்ஸ். இவர் லாட்டரி வெண்டிங் மெஷினில் லாட்டரி வாங்க முற்பட்டுள்ளார். அவரது திட்டம் 40 டாலர் மதிப்பிலான லாட்டரியை ஸ்க்ராட்சர் மெஷினில் இருந்து பெற வேண்டும் என யோசித்துக் கொண்டு ஆயத்தமானார். அப்போது அவர் மீது ஒருவர் திடீரென மோதினார். அதில் அந்தப் பெண் தான் அழுத்த நினைத்த பொத்தானை விட்டு வேறு ஒரு பொத்தானை தவறுதலாக அழுத்த நேர்ந்தது. இதனால் அந்தப் பெண் அதிருப்தியடைந்தார். அவர் அழுத்திய பொத்தானால் 30 டாலருக்கான லாட்டரி டிக்கெட் வந்தது. தான் திட்டமிட்ட பணத்தில் 75% இப்படி போய்விட்டதே என்ற விரக்தியில் அப்பெண் தனது காருக்கு திரும்பினார். அந்தப் பெண் காரில் அமர்ந்த பின்னர் லாட்டரி டிக்கெட்டை ஸ்க்ராட்ச் செய்ய அவருக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம், அவருக்கு 10 மில்லியன் டாலர் பரிசு கிடைத்திருந்தது.
இது குறித்து அந்தப் பெண், என்னால் முதலில் நம்பவே முடியவில்லை. நான் திரும்பத் திரும்ப அந்த லாட்டரியை எடுத்துப் பார்த்தேன். பின்னர் எனது ஃபோனில் இருந்த கலிஃபோர்னியா லாட்டரி மொபைல் ஆப்பில் அதை ஸ்கேன் செய்தேன், எனக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு உறுதியானது என்றார். திரும்பத் திரும்ப அந்த டிக்கெட்டைப் பார்த்து நான் பணக்காரி ஆனதை நினைத்து மகிழ்கிறேன்.
மேலும், தனக்குக் கிடைக்கும் பரிசுப் பணத்தை வைத்து ஒரு வீடு வாங்கப்போவதாகவும், ஒரு சிறிய தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்போவதாகவும் கூறினார். லாட்டரி தொகையுடன் எட்வர்ட்ஸுக்கு 50,000 அமெரிக்க டாலர் போனஸாகக் கிடைத்துள்ளது. இந்தத் தொகையை எட்வர்ட்ஸ் லாட்டரி வாங்கிய வான்ஸ் ஸ்டோர் கொடுத்துள்ளது.
முன்னதாக தன்னை இடித்துத் தள்ளிவிட்டு மன்னிப்பு கூட கேட்காமல் சென்ற நபரை நினைத்து வருந்தினேன். ஆனால் அவர் அப்படிச் செய்ததால் தான் எனக்குப் பரிசு கிடைத்துள்ளது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி என்றார். இதுதான் கர்மவினையோ என்று எட்வர்ட்ஸ் கிண்டலாகக் கூறியுள்ளார்.
ஒருமுறை இதே கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், பரிசு வென்ற லாட்டரி டிக்கெட்டை தொலைத்துவிட்டு பெரும் ஏமாற்றத்தை சந்தித்தார். அதேபோல், இன்னொரு அமெரிக்கப் பெண் லாட்டரி நிறுவனத்தில் இருந்து தொடர்ச்சியாக தனக்கு வந்த அழைப்புகளை போலி என நினைத்து தவிர்த்து பரிசுத்தொகையை தவறவிட்டார். லாட்டரி என்றாலே அதிர்ஷ்டம் தான் என்பதற்கு இவையெல்லாம் சாட்சி போல.!