Titanic Menu Card: டைட்டானிக் கப்பல்ல இருந்தவங்க இதையெல்லாம் சாப்பிட்டாங்களா? வைரலாகும் மெனு கார்டு
ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் 'டைட்டானிக்'.
டைட்டானிக் கப்பலில் பயணிகள் என்ன சாப்பிட்டனர் என்ற மெனு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்ற ஒரு திரைப்படம் 'டைட்டானிக்'.
இப்படத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது.25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் அமோகமான வரவேற்பை பெற்று வசூலிலும் அசைக்க முடியாத சாதனையை பெற்றது. மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என 11 ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1912ம் ஆண்டு பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் ஆயிரம் கணக்கான பயணிகளோடு பயணம் செய்த போது அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. ஏராளமானோர் உயிரிழந்த அந்த சோக வரலாற்றை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதிர வைக்கும் வசூலால் திணறடித்த இப்படம் 2012ம் ஆண்டு 100ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் நிகழ்வது போலவே இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
View this post on Instagram
111 ஆண்டுகள் பழமையான மெனு:
இந்நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய 111வது நினைவு தினமான ஏப்ரல் 15ல் டைட்டானிக் அட்லஸ் என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான இரவு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனு பகிரப்பட்டுள்ளது. சிக்கன் கறி, வேகவைத்த மீன், ஸ்ப்ரிங் லேம்ப், ஸ்ப்ரிங் மட்டன், டர்கி ரோஸ்ட், புட்டிங் எனப் பரிமாறப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் டெஸர்ட்டாக வழங்கப்பட்டிருக்கிறது. கப்பலில் இருந்த மூன்று வகுப்பு பயணிகளுக்கும் மூன்றுவிதமான உணவுகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
முதல் வகுப்பு பயணிகளுக்கு ஃபில்லட்ஸ் ஆஃப் ப்ரில், கார்ண்ட் பீஃப், வெஜிடபில்ஸ், டம்ப்ளிங்ஸ், க்ரில்ட் மட்டன் சாப்ஸ், கஸ்டர்ட் புட்டிங், பாட்டட் ஷ்ரிம்ப்ஸ், நார்வேஜியன் ஆன்சோவீஸ் போன்றவை பரிமாறப்பட்டுள்ளன. மூன்றாம் வகுப்பு பயணீகளுக்கு ஓட்மீல் பாரிட்ஜ், பால், ஸ்மோக்ட் ஹெர்ரிங்ஸ், ஜேக்கட் பொட்டேடோஸ், முட்டைகள், ஃப்ரெஷ் ப்ரெட், பட்டர், மர்மலேட், ஸ்வீடிஷ் ப்ரெட் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.