Watch Video: 21-ஆம் நூற்றாண்டில் டைனோசர்களா... சாலையை கடக்கும் குட்டி டைனோசர்கள்.. என்ன வீடியோ இது?
முயல் கூட்டம்போல் ப்ரோண்டோசரஸ் வகை டைனோசர் குட்டிகள் குதித்தோடும் வீடியோ ஒன்று ட்விட்டரில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன டைனோசர்களின் குட்டிகள் தற்போது நம் முன் தோன்றி, வீடியோ எடுக்கப்பட்டு, அந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம், முயல் கூட்டம் போல் ப்ரோண்டோசரஸ் வகை டைனோசர் குட்டிகள் குதித்தோடும் வீடியோ ஒன்று ட்விட்டரில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
கூட்டமாக ப்ரோண்டோசரஸ் இன குட்டி டைனோசர்கள் காட்டு வழிப் பாதை ஒன்றைக் கடப்பது போன்ற இந்த வீடியோ நேற்று (பிப்.24) ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ ஒரே நாளில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று தொடர்ந்து ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட்டில் டைனோசர்களை அச்சு அசலாக பிரதிபலித்த உலகப் புகழ்பெற்ற ஜூராசிக் பார்க் பட தீம் இசை பின்னணியில் ஒலிக்க, இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அழிந்து பல கோடி ஆண்டுகளைக் கடந்த பின் இந்த உயிரினம் எப்படி உயிர் பெற்று வந்தது என்ற குழப்பத்துடன் நெட்டிசன்கள் இந்த வீடியோவை முதலில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.
This took me a second.. 😂 pic.twitter.com/JgqVSUcYIb
— Buitengebieden (@buitengebieden) February 24, 2023
பலரும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் கடக்க, குட்டி குட்டி டைனோசர்கள் குதித்தோடும் இந்த வீடியோ நிஜமாக எடுக்கப்பட்டது தான் எனினும் இது ஒரு பிராங்க் (prank) வீடியோ என்பதை மற்றொரு தரப்பு நெட்டிசன்கள் கண்டுபிடித்து உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ க்ளிப்பிங்கை சில பல முறை உற்று பார்த்த பின் இது ப்ராங்க் என்பதைக் கண்டறிந்த நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் இது குறித்து ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் உரையாடி வருகின்றனர்.
ப்ரோண்டோசரஸ் (Brontosuarus) எனப்படும் கழுத்து நீண்ட டைனோசர் இனத்தின் குட்டி போல் இந்த வீடியோவில் இந்த விலங்கினம் காட்சியளிக்கும் நிலையில், உண்மையில் அவை கோட்டி (coati) எனும் விலங்கு குதித்தோடும் வீடியோவின் ரிவர்ஸ் வீடியோவாகும்.
அமெரிக்க காடுகளில் வாழும் குரங்கைப் போன்றதொரு விலங்கினமான கோட்டிக்கள், உண்மையில் குரங்குகள் அல்ல. அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த விலங்குகள் பன்றியின் நீண்ட, தசை மூக்கு, ரக்கூனின் வால் மற்றும் குரங்கின் மரம் ஏறும் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இ வை காட்டுப்பாதையைக் கடக்கும் வீடியொவை ரிவர்ஸ் செய்து யாரோ ஒருவர் பதிவிட, அவை டைனோசர்கள் போல் தோற்றமளித்த நிலையில் ட்ரெண்டாகி வைரலாகியுள்ளது.இப்போது டைனோசர்கள் உட்பட அனைத்து வகையான உயிரினங்களுக்கும் இது குழப்பமாக இருக்கலாம்!
இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்து தாங்கள் ஏமாந்து விட்டதாக பல நெட்டிசன்கள் ஒப்புக்கொண்டு சுவாரஸ்யமான கமெண்டுகளை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.