US Iran Peace Talk: "எங்ககிட்ட விளையாடாதீங்க!" - ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் கொடுத்த 'வெயிட்டான' வார்னிங்!
"நாங்கள் பேசத் தயார், ஆனால் எங்களை ஏமாற்ற நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது எதிர்பார்ப்புகளையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தனது எதிர்பார்ப்புகளையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமையும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
"நேர்மறையான பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கிறோம்"
ஈரானுடனான இந்த சந்திப்பு குறித்து ஜே.டி. வேன்ஸ் கூறுகையில், "நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். இது மிகவும் நேர்மறையாக அமையும் என்று நான் கருதுகிறேன். இந்தப் பேச்சுவார்த்தையில் நாம் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்," என்று குறிப்பிட்டார்.
ஈரான் உண்மையான விருப்பத்துடன் முன்வந்தால், தூதரக ரீதியாக இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
"ஏமாற்ற நினைத்தால் வேலைக்கு ஆகாது"
அதே சமயம், ஈரான் வெறும் கண்துடைப்பிற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றால், அது பலிக்காது என்றும் அவர் எச்சரித்தார். இது குறித்து அவர் பேசுகையில்:"ஈரானியர்கள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு கைகொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களை ஏமாற்றவோ அல்லது விளையாடவோ நினைத்தால், எங்களது பேச்சுவார்த்தைக் குழு அதற்கு ஒருபோதும் இணங்காது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்."
ஈரான் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும், அமெரிக்காவின் கறாரான அணுகுமுறையையும் ஜே.டி. வேன்ஸ் தனது பேச்சின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த ரகசிய அல்லது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் ஒரு பாலமாகச் செயல்படுகிறது. இது தெற்காசிய அரசியலில் பாகிஸ்தானின் முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்























