US Army Helicopter Crash: விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்கள்... 9 வீரர்கள் உயிரிழப்பு - அமெரிக்காவில் சோகம்
அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 9 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், அமெரிக்காவின் தென்மேற்கு கென்டகி பகுதியில் 101வது ஏர்போர்ன் பிரிவுக்கு சொந்தமான 2 எச்.எச்.60 ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் வழக்கமான பயற்சியில் ஈடுபட்டது.
9 பேர் உயிரிழப்பு:
அப்போது எதிர்பாராதவிதமாக இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், ஹெலிகாப்டரில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 9 வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டனர். இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
மொத்தம் 4 ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு ஹெலிகாப்டர் எரிபொருள் நிரப்புவதற்காக கீழே இறங்கிய நிலையில், மூன்று ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, முன்னால் சென்ற 2 ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியது.
ராணுவ ஹெலிகாப்டர்:
இதில், ஒரு ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். டென்னிஸி எல்லைப்பகுதியில் உள்ள ட்ரிக்கவுண்டி பகுதியில் நடந்த இந்த விபத்து தொடர்பாக, அந்த ஹெலிகாப்டர்களுக்கு சொந்தமான விமான தளம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது, வழக்கமான பயிற்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்கள் மருந்து மற்றும் தேவையான நிவாரண பொருட்களை சுமந்து செல்லும் பணியை மேற்கொண்டு வந்தது. விபத்தின்போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்த காலிப்பகுதியில் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால், அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தொடரும் விபத்துகள்:
இந்த விபத்தில் உயிரிழந்த 9 வீரர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், ஒவ்வொரு நாளும் நம் நாட்டிற்கு தைரியமாகவும் பெருமையுடனும் சேவை செய்யும் 101 வது வான்வழிப் பிரிவின் உறுப்பினர்களுக்கும் இந்த சேவையாளர்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலபாமாவில் இருந்து விசாரணைக்குழு விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு அலபாமாவில் பயற்சியில் ஈடுபட்ட யு.எச்.60 ப்ளாக் ஹாக் விமானம் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் ராணுவ பயிற்சியின்போது மட்டும் சராசரியாக 5 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Pope Francis Hospitalized: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Apple : ’இப்போ வாங்கிக்கோங்க.. அப்புறம் காசு கொடுங்க!’- Apple நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய சேவை என்னன்னு தெரியுமா?