US Flight Delays: உச்சக்கட்ட குழப்பம்... தொழில்நுட்ப கோளாறால் அமெரிக்க முழுவதும் விமான சேவை முடக்கம்... நடந்தது என்ன?
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விமானங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து விமானங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக என்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில், "விமானிகளுக்கும் மற்ற விமானத்துறை அதிகாரிகளுக்கும் அபாயம் குறித்தும் விமான சேவையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்தும் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்தும் அறிவிப்பு அனுப்புவது அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் அமைப்பு. இது, புதிய தகவல்களை புதுப்பிக்கவில்லை"
இந்த அமைப்பை சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அதில், NOTAM (விமான சேவை குறித்து தகவல்கள் அனுப்பும் அமைப்பு) அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு எப்போது சரி செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கவுக்கு வந்து சேரும், வெளியே செல்லும் 100 கணக்கான விமானங்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணி வரை 760 விமானங்களின் இயக்கம் தாமதம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 91 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் முதல் வாஷிங்டன் வரை அமெரிக்கா முழுவதும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவது குறித்தும் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்தும் சமூக ஊடகங்களில் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
The FAA is working to restore its Notice to Air Missions System. We are performing final validation checks and reloading the system now.
— The FAA ✈️ (@FAANews) January 11, 2023
Operations across the National Airspace System are affected.
We will provide frequent updates as we make progress.
விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதை டெக்சாஸ் முதல் பென்சில்வேனியா வரையிலான விமான நிலையங்கள் உறுதி செய்துள்ளது.
சமீப காலமாக, இந்தியாவில் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு ஜூலை மாதமே இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுருந்தது.