மேலும் அறிய

Afghanistan Crisis: ஆப்கான் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடுகிறது..

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.

ஆப்கானிஸ்தானில் வன்முறைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சமீபத்திய முன்னேற்றங்கள் நாளை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று  கூறப்படுகிறது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டவர்களை பாதுக்காப்பாக  வெளியேற்றுவது தொடர்பான தீர்மானங்களை   பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் நிரந்தரமல்லாத உறுப்பினர் ஜெர்மனி ஆகிய நாடுகள்  முன்மொழிந்தன.  இதில் பயங்கரவாத எதிர்ப்பு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் குறித்தும்  குறிப்பிடப்பட்டுள்ளன.   

நாளையுடன் ( 31-ம் தேதி) ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஜோ பைடன் அரசு கூறியிருந்ததது.  அதன் பிறகு, காபூல் விமான நிலையத்தை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்மானத்துக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்கானுக்கு ஐ.நா வின் அமைதி காக்கும் படைகள் அனுப்பும்  சாத்தியம் குறித்து பாதுகாப்பு கவுன்சில் எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை என்று ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் முன்னதாக தெரிவித்தது. முன்னதாக, ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக்கூட்டம் நியூயார்க்கில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்றது . இந்தியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஐ நா-வுக்கான இந்திய தூதரும், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான டி எஸ் திருமூர்த்தி பேசுகையில், ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் மீறப்படுவது கவலையளிப்பதாக கூறினார். ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்க அனுமதிக்கக் கூடாது என்று ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்தார். 

முன்னதாக, சுழற்சி அடிப்படையிலான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா  கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஏற்றுக் கொண்டது.

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளுடன் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளன. இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள், சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு தலைமை பொறுப்பை வகிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் முதல்முறையாக இந்த கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுக் கொண்டது

மேலும், வாசிக்க: 

Afghanistan Crisis: எங்க குரலைக் கேளுங்க... காப்பாத்துங்க.. ஆப்கான் பத்திரிக்கையாளர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்

Kabul Airport Blast: காபூல் குண்டுவெடிப்புக்கு காரணமான ISIS கொரசான் அமைப்பு.. யார் இவர்கள்? 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Embed widget