Ukraine Chopper Crash : உக்ரைன் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து... காரணம் என்ன? அதிபர் ஜெலன்ஸ்கி திடுக்கிடும் தகவல்...
உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்
அண்டை நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், கடந்த மார்ச் மாதம் தொடங்கி 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரானது தொடங்கிய சில நாட்களிலேயே முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவிற்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி அளித்து வருகிறது. அண்மையில், இந்த போர் தொடர்பாக பேசிய புதின், உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயார் நிலையில் உள்ளதாகவும், சிலர் அதனை தடுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கிவிட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வளவு முயற்சி செய்தும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. தனது பலமான ராணுவ கட்டமைப்புகைளை கொண்டு உக்ரைனின் ராணுவ நிலைகள், குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை ரஷ்யா தகர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
ஹெலிகாப்டர் விபத்து
இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை உக்ரைன் கீவ் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் உயிரிழந்ததாகவும் ஏ.எஃப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டிருந்தது. பள்ளிக்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் மேலும் சிலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியது. உக்ரைன் கீவ் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்தில் உள்துறை அமைச்சர் டெனிஸ் உயிரிழந்துள்ளதால், உக்ரைனின் தற்காலிக உள்துறை அமைச்சராக தேசிய கால்துறை படையின் தலைவர் இஹோர் கிளைமென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
Eighteen people, including Ukraine´s interior minister and three children, were killed in a helicopter crash near a kindergarten outside Kyiv on Wednesday. pic.twitter.com/IdECG8PZO7
— Ahmed Waqar (@Ahmed_WB) January 18, 2023
”போரின் விளைவுதான்”
இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலியில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பேசிய அவர், உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து நடந்தது போரின் விளைவுதான். இந்த விபத்துக்கு போர்தான் காரணம். சம்பவத்தின்போது மிகவும் பனிமூட்டமாக இருந்தது. மின்சாரம் கிடையாது. கட்டிடங்களில் விளக்கு எரியவில்லை. போரின் விளைவுகளால் தான் இந்த துயரம் சம்பம் நடந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
"அதிகாரம் இல்லை" - ஜெலன்ஸ்கி
இதனை தொடர்ந்து பேசிய அவர், "இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் எனக்கு இதைப்பற்றி பேச அதிகாரம் இல்லை” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார். மேலும் அந்த சம்பவம் எனக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.