மிகப்பெரிய விமான விபத்தை தடுத்த டெக்னாலஜி! TCAS பற்றி தெரியுமா உங்களுக்கு?
Mid-air collision : இரண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானங்கள் ஈரானிய எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஒரு பெரிய அசம்பாவிதத்தில் இருந்து தப்பியது.
Pakistan Planes mid-air collision: நடுவானில் நடக்கவிருந்த பயணிகள் விமான விபத்து எப்படி தடுக்கப்பட்டது
ஜூலை 24, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) விமானங்கள் ஈரானிய எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஒரு பெரிய அசம்பாவிதத்தில் இருந்து தப்பித்தன. அதன் மூலம் ஒரு நிகழ்விருந்த ஒரு பெரிய சோகம் தவிர்க்கப்பட்டது என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டான் செய்தித்தாள் குற்றச்சாட்டு:
ஈரானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அலட்சியத்தால் தான் இரு PIA பயணிகள் விமானங்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கமானதற்கும் ஒரே பாதையில் ஒரே உயரத்தில் இருந்தன. அது தான் விபத்து நேர காரணம் என தெரிவிக்கிறது பாகிஸ்தானின் டான் செய்தித்தாள்.
விமானத்தின் விவரம் :
இரு விமானங்களில் ஒன்று இஸ்லாமாபாத்தில் இருந்து துபாய்க்கு சென்ஸ்ட்ரு கொண்டிருந்த PIA போயிங் 777 (PK-211) ரக விமானம் மற்றொன்று தோஹாவில் இருந்து பெஷாவர் நோக்கி பயணித்த ஏர்பஸ் A-320 (PK-268) என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தின் கேப்டன்கள் யார்?
ஏர்பஸ் ஏ-320 விமானத்தை கேப்டன் சமியுல்லா இயக்கியுள்ளார் மற்றும் போயிங் 777 ஐ விமானத்தை கேப்டன் அதர் ஹாரூன் இயக்கியுள்ளார் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இரண்டு விமானங்களும் அதனுடைய நடைமுறையை சரியாக பின்பற்றின. ஒன்று மேல் ஏறும் படியும் மற்றோன்று கிழே இறங்கும் படியும் தகவல் பரிமாறப்பட்டது.
விமானத்தை TCAS எப்படி வழிநடத்துகிறது?
அனைத்து விமானங்களிலும் போக்குவரத்து மோதல் தவிர்ப்பு அமைப்பு (TCAS) பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் மற்ற விமானங்களின் TCASகளுடன் தொடர்புகொண்டு விமானத்தை வழிநடத்துகிறது.
ஈரானிய ஏடிசி விமானத்திற்கு அறிவுறுத்தியதால் விசாரிப்பதற்காக ஈரானிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு ஒரு கடிதத்தை PIA எழுதியுள்ளது ஆனால் அது தவறு என்கிறார் PIA செய்தி தொடர்பாளர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விபத்து எப்படி தடுக்கப்பட்டது?
போயிங் 777 விமானம் 35,000 அடி உயரத்திலும் ஏர்பஸ் A-320 36,000 அடி உயரத்திலும் பறந்து கொண்டு இருந்தது. ஏர்பஸ் ஏ-320 விமானம் 20,000 ஆதி கிழே இறங்க அனுமதி வழங்கப்பட்டது என PIA செய்தி தொடர்பாளர் தகவல் கொடுத்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது. TCAS அமைப்பு தானாகவே இரு விமானங்களையும் வழிநடத்தி பாதையை சரி செய்து விபத்தை தடுத்துள்ளது என டான் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. தொழிநுட்ப வளர்ச்சியால் மட்டுமே நடுவானில் நடக்கவிருந்த இந்த பெரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.