மேலும் அறிய

Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்

ஈரானுக்கு புதிய மிரட்டல் விடுத்துள்ள ட்ரம்ப், பிக்காக்ஸ் மலைக்குக் கீழே உள்ள அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா விரைவில் தாக்கக்கூடும் என்று கூறியுள்ளார். மேலும் "பிக்காக்ஸில் யார் வந்து செல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்றும் கூறியுள்ளார்.

பிக்காக்ஸ் மலைக்குக் கீழே உள்ள ஈரானின் அணுசக்தி நிலையத்தை அமெரிக்கா விரைவில் தாக்கக்கூடும் என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அனைத்து நிகழ்வுகளையும் வாஷிங்டன் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தடுப்பதே அதன் முதன்மை நோக்கம் என்று கூறி, ஈரானுக்கு எதிரான பல மாத கால அமெரிக்க ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

ட்ரம்ப் கூறியது என்ன.?

இது குறித்து பேசிய ட்ரம்ப், "நாங்கள் அங்கு ஐந்து மாதங்களாக இருக்கிறோம். அந்த ஐந்து மாதங்களில் நாங்கள் என்ன செய்தோம் தெரியுமா.? அவர்களிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்," என்று கூறிய ட்ரம்ப், அந்த இடத்தில் ஏதேனும் அணு ஆயுதச் செயல்பாடு காணப்பட்டால், அமெரிக்கா பிக்காக்ஸ் மலையை தாக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.

பிக்காக்ஸ் எங்கே இருக்கிறது.?

மேலும், "பிக்காக்ஸில் யார் வந்து செல்கிறார்கள் என்பதும், ஈரான் முழுவதும் யார் எங்கே நகர்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஏதாவது தவறாக நடந்தால், நாங்கள் அவர்களை தாக்குவோம், கடுமையாக தாக்குவோம்." என்று ட்ரம்ப் கூறினார்.

பிக்காக்ஸ் மலை, ஈரானின் கடுமையாக சேதமடைந்த நடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் நிலையத்திற்கு அருகில் உள்ளது. மேலும், அங்கு இரண்டு நிலத்தடி சுரங்கங்கள் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் தளம் தரைக்கடியில் அமைந்திருப்பதால், அது வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஈரான் ஆயிரக்கணக்கான சென்ட்ரிஃபியூஜ்களை இந்த தரைக்கடியிலான வசதிக்கு நகர்த்தியுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நம்புவதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, இந்தத் தளத்தின் மீதான ஒரு அமெரிக்கத் தாக்குதல், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான வாஷிங்டனின் நடவடிக்கையை கணிசமாக வேகப்படுத்தக்கூடும்.

ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கையை நியாயப்படுத்தும் ட்ரம்ப்

அதோடு, அமெரிக்க ராணுவத் தலையீடு ஒரு பெரிய பிராந்திய மோதலை தடுத்ததாக ட்ரம்ப் கூறினார். வாஷிங்டன் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், ஈரான் இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இன்னும் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், "நாம் அங்கு செல்லாமல் இருந்திருந்தால், இன்று இஸ்ரேலும் இருந்திருக்காது, மத்திய கிழக்கும் இருந்திருக்காது. இதற்குப் பிறகு அவர்கள் அநேகமாக ஐரோப்பிய நகரங்களையும் நமது நகரங்களையும் தாக்கியிருப்பார்கள்," என்று ட்ரம்ப் கூறினார்.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
Russia Vs Ukraine: உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
Trump Warns Iran: “பூப் பாதையா.? சிங்கப் பாதையா.?, நீங்களே முடிவு பண்ணுங்க“: ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை
“பூப் பாதையா.? சிங்கப் பாதையா.?, நீங்களே முடிவு பண்ணுங்க“: ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை
Kuwait Ship Attacked Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்
ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget