மேலும் அறிய

Donald Trump: “இனி நான் நல்லவனா இருக்க மாட்டேன்“; துப்பாக்கியை கையில் எடுத்த ட்ரம்ப்; என்ன இப்படி கிளம்பிட்டாரு.!

ஏற்கனவே ஒரு முறை நான் இனி நல்லவனாக இருக்க மாட்டேன் என பதிவிட்ட ட்ரம்ப், இப்போது துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இனி நல்லவனாக இருக்க மாட்டேன் என மீண்டும் பதிவிட்டுள்ளார்.

ஈரானுடன் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், தனது பதிவுகள் மூலம் மிரட்டலை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வரிசையில், தான் தற்போது துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, இனி நல்லவனாக இருக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார் ட்ரம்ப். அவரது பதிவு குறித்து இப்போது பார்க்கலாம்.

ட்ரம்ப் போட்ட பதிவு என்ன.?

தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் சுதாரித்துக்கொள்ளவில்லை என்றும், அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் எவ்வாறு கையெழுத்திடுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு, ''NO MORE MR. NICE GUY!'' என்று தலைப்பிட்டு, தனது கையில் துப்பாக்கி இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் கோரியதாக கூறிய ட்ரம்ப்

இதற்கு முன்னதாக, ஈரான் குறித்து பதிவிட்ட ட்ரம்ப், ஹார்முஸை திறக்க அவர்கள் கோரிக்கை விடுத்ததாக கூறியிருந்தார். அந்த பதிவில், “தாங்கள் ஒரு “சரிவு நிலையில்” இருப்பதாக ஈரான் சற்றுமுன் எங்களுக்கு தெரிவித்துள்ளது. அவர்கள் தங்கள் தலைமைத்துவ நிலைமையை சீரமைக்க முயற்சிக்கும் வேளையில் (அதை அவர்களால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்!), கூடிய விரைவில் “ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்குமாறு” எங்களிடம் கோருகின்றனர்.“ என தெரிவித்திருந்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருப்பதே ஈரான் தான். அந்த எல்லைக்கு அப்பால் தான் அமெரிக்கா அந்த வழியாக சென்று வரும் கப்பல்களை முற்றுகையிட்டு வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்குமாறு ஈரான் தங்களிடம் கோரியதாக ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் கூற்றுகளை தொடர்ந்து மறுத்துவரும் ஈரான்

தான் நினைத்ததையெல்லாம் பதிவுகளாக ட்ரம்ப் போட்டுவரும் நிலையில், இதுவரை அவர் வெளியிட்ட பதிவுகள் எல்லாவற்றையும் திட்டவட்டமாக ஈரான் மறுத்து வருகிறது. ஆனாலும், ஈரான் குறித்த பதிவுகளை போடுவதை ட்ரம்ப் கைவிடவில்லை. இப்போது, இனி நல்லவனாக இருக்க மாட்டேன் என மீண்டும் பதிவை போட்டுள்ளார்.

ஆனால், ஏற்கனவே இது போன்ற பதிவை போட்டு பீதியை கிளப்பிய நிலையில், அமெரிக்கா எந்த மாதிரி தாக்குதலை நடத்துமோ என்று உலக நாடுகளே அஞ்சி இருந்தன. ஆனால், ஈரானை வெறும் வார்த்தைகளில் மட்டுமே மிரட்டிவரும் ட்ரம்ப், இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை. ஏற்கனவே அமலில் இருந்த போர்நிறுத்தத்தை தானாகவே, அதுவும் காலவரையின்றி நீட்டித்துள்ளார் ட்ரம்ப்.

இது ஒருபுறமிருக்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்த நிலையில், ரஷ்யா தங்களது முழு ஆதரவையும் ஈரானுக்கு வழங்கும் என அவரிடம் புதின் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget