மேலும் அறிய

Apple New CEO: ஆப்பிளுக்கு டாடா சொன்ன டிம் குக் - புதிய சிஇஒ ஜான் டெர்னஸ்.. யார் இவர்? எத்தனை கோடி சம்பளம்?

Apple New CEO John Ternus: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகிய டிம் குக்கின் பதவிக்கு, ஜான் டெர்னஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Apple New CEO John Ternus: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜான் டெர்னஸ் யார் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகும் டிம் குக்

உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், தொழில்நுட்ப உலகின் முடுசூடா மன்னனாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக டிம் குக் அறிவித்துள்ளார். நிறுவனத்தின் ஹார்ட்வேர் துறை தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டு வரும் ஜான் டெர்னஸ், ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியா வரும் செப்டம்பர் 1ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிறுவனத்தின் தலைமை பதவியில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேநேரம், டிம் குக் நிறுவனத்திலிருந்து முழுமையாக வெளியேறாமல் நிர்வாக தலைவர் பதவியை ஏற்க உள்ளார்.

15 வருடங்கள் சிஇஒ-வாக இருந்த டிம் குக்

நிறுவனத்தில் நிலவிய நிலையற்ற தன்மையை அடுத்து தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் விலகிய பிறகு, கடந்த 2011ம் ஆண்டு அந்த பதவியை டிம் குக் ஏற்றார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அந்த பதவியை வகித்த காலகட்டத்தில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.6 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தை முன்னின்று வழிநடத்தியது என் வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம் என டிம் குக் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

யார் இந்த ஜான் டெர்னஸ்?

தலைமை பதவியில் மாற்றம் கண்டு ஜான் டெர்னஸ் என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, நிறுவனம் புதிய இலக்கை நோக்கி தங்களது பயணத்தை தீவிரப்படுத்துவதை உணர்த்துகிறது. 50 வயதான இவர் சுமார் 25 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவின் மூத்த துணை தலைவரான ஜான், ஐபோன், மேக், விசியன் ப்ரோ ஹெட்செட் உள்ளிட்ட ப்ராண்டின் பல முக்கிய சாதனங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் வழிகாட்டியாக பணியாற்றியுள்ளார்.


Apple New CEO: ஆப்பிளுக்கு டாடா சொன்ன டிம் குக் - புதிய சிஇஒ ஜான் டெர்னஸ்.. யார் இவர்? எத்தனை கோடி சம்பளம்?

ஜான் டெர்னஸின் தலைமையின் கீழ், ஆப்பிள் நிறுவனமானது ஹார்ட்வேர் மற்றும் தயாரிப்பு பொறியியலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவில் பல கேள்விகளை ஆப்பிள் எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த தலைமை மாற்றம் அதற்கான பதிலை கொடுக்கும் என கூறப்படுகிறது. கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், கூகுள் தனக்கான புதிய திட்டங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜான் டெர்னஸ் சம்பளம் எவ்வளவு?

ஜான் டெர்னஸின் மொத்த சொத்து மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருவதால் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை அடிப்படை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், மூத்த துணை தலைவர் போன்ற பதவிகளை வகிப்போருக்கு ஆப்பிள் நிறுவனமானது, பல சிறப்பு நிதி திட்டங்களை செயல்படுத்துவதால் ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, ஜான் டெர்னஸ் ஊதியமாக பெறுவார் என்று மதிப்பிடப்படுகிறது. தற்போது தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்று இருப்பதால், ஊதியம் பல மடங்கு உயரக்கூடும். அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும் தற்போதைய சிஇஒ-வான டிம் குக் வாங்கும் சுமார் 74.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற ஊதிய பேக்கேஜ் அப்படியே ஜானிற்கும் தொடரும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 700 கோடி ரூபாயாகும். இதில் அவருக்கு என ஒதுக்கப்படும் பங்குகளின் மதிப்பும் அடங்கும்.

டிம் குக் சாதித்ததும்.. சம்பளமும்..

தலைமைச் செயல் அதிகாரியாக குக் இருந்த காலத்தில்  உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் ஆப்பிளின் நிலை வேகமாக முன்னேறியது. 1998ம் ஆண்டு நிறுவனத்தில் சேர்ந்த பிறகு, குக் முதலில் ஆப்பிளின் சிக்கலான விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதன் மூலம் நற்பெயரை பெற்றார். தலைமைச் செயல் அதிகாரியாக, ப்ராண்டின் ஐபோனையும் தாண்டி வணிகத்தை விரிவுபடுத்தி, சேவைகளை உருவாக்கி, ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில், ஆப்பிளை 1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலானதாக மாற்றி  பின்னர் 4 ட்ரில்லியன் டாலர் மதிப்பீட்டிற்கு வழிநடத்தினார். நிதி ஆதாயங்கள் இருந்தபோதிலும், தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதை விட, ஏற்கனவே உள்ள யோசனைகளை விரிவுபடுத்துவதிலும் செம்மைப்படுத்துவதிலும் குக் வலிமையானவராக இருப்பதாக சந்தை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஆண்டின் அக்டோபர் மாத நிலவரப்படி, டிம் குக்கின் சொத்து மதிப்பு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்படுகிறது. டிம் குக்கின் அடிப்படை சம்பளம் என்பது 3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஆனால், போனஸ் மற்றும் பங்கு ஒதுக்கீடுகள் ஆகியவை டிம் குக்கின் கைக்கு வரும் ஊதியத்தை பல மடங்கு உயர்த்துகிறது. கடந்த 2022ம் ஆண்டில் 99 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget