Thirukkural Festival : ‘துபாயில் மாபெரும் திருக்குறள் விழா – போட்டிகளும் உண்டு’ பங்கேற்க இதை செய்யுங்க..!
’துபாயில் மே 4ஆம் தேதி நடைபெறும் திருக்குறள் விழாவில் பங்கேற்க உலகத் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’

உலகப் பொதுமறையான திருக்குறளை உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என்பதுதான் தமிழறிஞர்களின் கனவு. அந்த கனவை நனவாக்கும் முயற்சியில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். பல்வேறு வழிகளில் திருக்குறளை உலக மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெளிநாடு சென்றோமோ, பணத்தையும் சொத்துக்களையும் சேர்த்தோமா என்றிருக்காமல், திருக்குறளின் மேன்மை பொருந்திய கருத்துகளை அவர்கள் கொண்டாடித் தீர்ப்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியான இன்னொரு ஆச்சரியம்தான் விரைவில் நடக்கவிருக்கிறது.
துபாயில் மாபெரும் திருக்குறள் விழா
உலக பொதுமறையான திருக்குறளை மேலும் அதிகப்படியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நம்ம SKY BLUE MEDIA - டத்தோ மணிகண்டமூர்த்தி நடத்தும் மாபெரும் திருக்குறள் விழா நிகழ்ச்சி துபாயில் நடைபெற்வுள்ளது.
இந்த விழா துபாய் ஷேய்க் ரஷீத் ஆடிட்டோரியமில் மே 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினர்கள்
SKY BLUE MEDIA - டத்தோ மணிகண்டமூர்த்தி நடத்தும் இந்த ‘திருக்குறள் விழா’வில் சிறப்பு அழைப்பாளர்களாக, புதுச்சேரி முதலமைச்சர் N.ரெங்கசாமி, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், இளம் இசைக் கலைஞரான லிடியன் நாதஸ்வரம், தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன், அனல் பறக்கும் தனது பேச்சால் தனி அடையாளம் கண்ட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பேச்சாளர் பிரபல வழக்கறிஞர் சுமதி மற்றும் பல்வேறு முன்னணி பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
குழந்தை முதல் பெரியவர் வரையிலான போட்டிகள்
இந்த விழாவில், அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக பல்வேறு போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மகா மேடையில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் சிறியவர் முதல் பெரியவர் வரை எத்தனை வயதை உடையவர்கள் ஆனாலும் பங்கேற்கலாம் என்று SKY BLUE MEDIA - டத்தோ மணிகண்டமூர்த்தி அறிவிதுள்ளனர்.
போட்டியில் எப்படி பங்கேற்பது ?
திருக்குறள் தொடர்பாக நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறவர்கள். முதலில் https://tinyurl.com/ThirukkuralVizha2025 என்ற லிங்கை பயன்படுத்தி தங்களது விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னரே போட்டியில் பங்கேற்பவர்களுக்கான விவரங்க்ள் தெரிவிக்கப்படும்.
கீழ் கண்ட லிங் மூலம் திருக்குறள் மாநாடு தொடர்பான விவரங்கள் / போட்டிக்கான விவரங்களை கண்டறிய முடியும்.
General Whatsapp Group Link: https://chat.whatsapp.com/BoJ5iuRKirDLBTPurlFQGU
Participants Whatsapp group Link
மழலை கூறும் நல்லுலகு - MAZHALAI KOORUM NAL ULAGU : https://chat.whatsapp.com/CCoa78GjSfv5awa5kr8qvP
பழமொழியும் குறள் மொழியும் -PAZHAMOZHIYUM KURAL MOZHIYUM : https://chat.whatsapp.com/LprRR8k7Ar7AGF6n4ouCcr
குறள் தரும் தத்துவம் - KURAL THARUM THATHUVAM : https://chat.whatsapp.com/H4RilhII5qYIj2DUV9N2yc

