Trump Nobel Prize: ”சொன்னா கேளுங்கய தரமாட்டாங்க” ட்ரம்ப் பேச்சை மீறும் பாக்., நோபல் பரிசு கேட்டு பிடிவாதம்
Trump Nobel Prize: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ளது.

Trump Nobel Prize: தனக்கு நோபல் பரிசு தராதற்கான காரணம் என்ன என்பதை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
ட்ரம்ப் பெயரை பரிந்துரைத்த பாகிஸ்தான்:
தீர்க்கமாக தலையிட்டு தனது தலைமைத்துவத்தின் மூலம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்த, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2026ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கம் முறைப்படி பரிந்துரைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப், தனக்கு ஏற்கனவே அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அதற்கு ஆதரவளித்து உள்ளது.
🚨🇺🇸Donald Trump : « Je suis toujours un pacificateur. (…) On devrait me donner le prix Nobel pour le Rwanda et avez-vous regardé le Congo 🇨🇩 (RDC) ? On pourrait citer la Serbie et le Kosovo. On pourrait en citer beaucoup d'autres. » pic.twitter.com/aNxCFxLqsB
— LSI AFRICA (@lsiafrica) June 20, 2025
”எனக்கு கொடுக்கமாட்டாங்க”
பாகிஸ்தானின் பரிந்துரை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “ரவாண்டாவில் அமைதியை ஏற்படுத்தியதற்காகவே எனக்கு நோபல் பரிசை வழங்கி இருக்க வேண்டும். காங்கோவை பாருங்கள். அல்லது செர்பியா, கொசோவா போன்ற நாடுகளை கூட குறிப்பிடலாம். அதில் மிகப்பெரியது இந்தியா - பாகிஸ்தான் மோதல். ஏற்கனவே எனக்கு நான்கு அல்லது ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு தரமாட்டார்கள்.காரணம் லிபரல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே நோபல் பரிசை வழங்குவார்கள்” என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து மறுக்கும் இந்தியா:
இரண்டு அணுசக்தி நாடுகளுக்கிடையேயான பதற்றங்களைத் தணிக்க உதவியதாக டிரம்ப் நீண்ட காலமாகக் கூறி வருகிறார். ஆனால், இதனை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஆபிரகாம் ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேலுக்கும் பல அரபு நாடுகளுக்கும் இடையிலான இயல்பாக்க ஒப்பந்தங்களை எளிதாக்குவதில் முக்கிய பங்காற்றியதாக், அமைதிக்கான நோபல் பரிசுக்கான பல பரிந்துரைகளை ட்ரம்ப் பெற்றாலும் அவருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை.
பாகிஸ்தானின் நோக்கம் என்ன?
இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தாலும், மோதல் முடிவுக்கு வர ட்ரம்பின் தலையீடு முக்கிய காரணம் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவை பின்னுக்கு தள்ளி, அமெரிக்கா உடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அமெரிக்காவின் ஆதரவை பெறுவதன் மூலம், சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் பாகிஸ்தான் நம்புகிறதாம்.
யாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு?
அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் நாவே நோபல் குழுவால் வழங்கப்படுகிறது. அமைதியை மேம்படுத்துவதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும், தங்களது முயற்சிகளின் அடிப்படையில் பங்களித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. டிரம்பின் வேட்புமனு குறித்து அந்தக் குழு ஒருபோதும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்ததில்லை.



















