மேலும் அறிய

2100-ஆம் ஆண்டிற்குள் உலகின் 83% பனிப்பாறைகள் உருகக்கூடும்.. ஆய்வாளர்கள் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..

உலகின் பனிப்பாறைகள் விஞ்ஞானிகள் நினைத்ததை விட வேகமாக உருகி வருகின்றன, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தற்போதைய காலநிலை மாற்ற போக்குகளில் நூற்றாண்டின் இறுதியில் உருகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

உலகின் பனிப்பாறைகள் விஞ்ஞானிகள் நினைத்ததை விட வேகமாக சுருங்கி மறைந்து வருகின்றன, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு தற்போதைய காலநிலை மாற்ற போக்குகளில் நூற்றாண்டின் இறுதியில் உருகிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் உலகம் எதிர்கால வெப்பமயமாதலை இன்னும் சில பத்தில் ஒரு டிகிரிக்கு குறைத்து சர்வதேச இலக்குகளை நிறைவேற்றினால் - தொழில்நுட்ப ரீதியாக இதனை தடுக்க சாத்தியமாகும் ஆனால் பல விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இது நிச்சயமாக சாத்தியமில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் சிறிய ஆனால் நன்கு அறியப்பட்ட பனிப்பாறைகள் அழிவை நோக்கி செல்கின்றன என்று ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதேபோல் வெப்பமயமாதல் தொடர்ந்தால் உலகின் 83% பனிப்பாறைகள் இல்லாமல் போய்விடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 Thursday science journal மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி உலகின் 2,15,000 நிலம் சார்ந்த பனிப்பாறைகள் அனைத்தையும் (கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகளில் உள்ளவற்றைக் கணக்கிடவில்லை) கடந்த கால ஆய்வுகளை விட விரிவான முறையில் ஆய்வு செய்தது. விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி, வெப்பமயமாதலின் வெவ்வேறு நிலைகளை கொண்டு, எத்தனை பனிப்பாறைகள் மறைந்துவிடும், எத்தனை டிரில்லியன் டன் பனி உருகும் மற்றும் இது கடல் மட்ட உயர்வுக்கு எவ்வளவு பங்களிக்கும் என்பதைக் கணக்கிட்டனர்.  

தொழில்துறைக்கு முந்தைய காலத்திலிருந்து உலகம் இப்போது 2.7 டிகிரி செல்சியஸ் (4.9 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை உயர்வுக்கான பாதையில் உள்ளது, அதாவது 2100 ஆம் ஆண்டில் உலகின் 32% பனிப்பாறை அல்லது 48.5 டிரில்லியன் மெட்ரிக் டன் பனியை இழக்கும். கிட்டத்தட்ட 68% பனிப்பாறைகள் மறைந்து வருகின்றன. இது கடல் மட்ட உயர்வை 4.5 அங்குலங்கள் (115 மில்லிமீட்டர்) அதிகரிக்கும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் டேவிட் ரவுன்ஸ் கூறினார்."எதுவாக இருந்தாலும், நிறைய பனிப்பாறைகளை இழக்கப் போகிறோம், ஆனால் நாம் எத்தனை பனிப்பாறைகளை இழக்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் எங்களிடம் உள்ளது" என்று கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணரும் பொறியியல் பேராசிரியருமான ரோன்ஸ் கூறினார்.

மேலும் "பல சிறிய பனிப்பாறைகளுக்கு இது காலம் கடந்தது, இருப்பினும், உலகளாவிய ரீதியில் எங்கள் முடிவுகள் தெளிவாகக் உள்ளது, உலகளாவிய வெப்பநிலையின் ஒவ்வொரு மாற்றமும் பனிப்பாறைகள் உருகுவதற்கு பங்களிக்கும்"என்று அலாஸ்கா ஃபேர்பேங்க்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயில் உள்ள ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணரான ரெஜின் ஹாக் கூறினார்.  2100 இல் கணிக்கப்படும் பனி இழப்பு 38.7 டிரில்லியன் மெட்ரிக் டன் முதல் 64.4 டிரில்லியன் டன் வரை இருக்கும், இது பூகோளம் எவ்வளவு வெப்பமடைகிறது மற்றும் எவ்வளவு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு எரிகிறது என்பதைப் பொறுத்து, இருக்கும் என கூறுகின்றனர்.         

உருகும் பனிக்கட்டிகள் அனைத்தும் 3.5 இன்ச் (90 மில்லிமீட்டர்) முதல் 6.5 இன்ச் (166 மில்லிமீட்டர்) வரை உலகின் கடல் மட்டம் உயர்வதற்கு காரணமாக இருக்கும், இது முந்தைய கணிப்புகளை விட 4% முதல் 14% வரை அதிகமாக இருக்கும் பனிப்பாறைகளிலிருந்து 4.5 அங்குல கடல் மட்டம் உயர்ந்தால், உலகெங்கிலும் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 100,000 க்கும் அதிகமான மக்கள் உயர் அலைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்று கடல் மட்டம் ஆராய்ச்சியாளர் பென் ஸ்ட்ராஸ், Climate Central இன் CEO கூறியுள்ளார் . இருபதாம் நூற்றாண்டு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு, 2012 சூப்பர்ஸ்டார்ம் சாண்டியின் எழுச்சிக்கு சுமார் 4 அங்குலங்களைச் சேர்த்தது, சுமார் 8 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியது என மேலும் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?
Nissan Magnite: பட்ஜெட் விலையில் மேக்னட் போல இழுக்கும் Nissan Magnite! தரமும், மைலேஜும் எப்படி?
Embed widget