‛எந்த காலத்துலய்யா இருக்கீங்க...’ வில் அம்புகளை கொண்டு மக்கள் மீது தாக்குதல்!
மக்கள் மீது ஒரு நபர் மட்டும் எப்படி ஒரு பெரிய தாக்குதலை நடத்தியிருக்க முடியும், இதற்கு காரணம் என்ன? என்பது மக்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நார்வேயில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது வில் அம்பு எய்தியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து போலீசார் மர்ம நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென் மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தீடிரென மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். பொதுவாக தலைநகரின் மையப்பகுதி என்பதால் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும். அதேப்போன்று தான் நேற்றும் மக்கள் பிஸியாக இருந்த நிலையில் தான் திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த வில், அம்புகளைக் கொண்ட கண்மூடித்தனமாக தாக்கியதோடு துப்பாக்கிசூடும் நடத்தியுள்ளார். அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன்னரே பெரும்பாலான மக்கள் சுருண்டு விழுந்தனர். மேலும் பலர் அங்கிருந்து எப்படியாவது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தப்பித்து ஓடிவிட்டனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்ப இடத்திற்கு விரைந்த போலீசார் இச்செயலைத் தடுக்க நினைக்கும் போது மர்ம நபருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மக்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து முழுமையான தகவல்களை போலீசார் தரப்பில் இருந்து வெளியாகிவில்லை. இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
மக்கள் மீது ஒரு நபர் மட்டும் எப்படி ஒரு பெரிய தாக்குதலை நடத்தியிருக்க முடியும், இதற்கு காரணம் என்ன? என்பது மக்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதற்கான காரணம் இன்று தெரியவில்லை. ஆனால் பயங்கரவாத செயலாக இருக்கக்கூடுமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். இதோடு தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள் அனைத்தும் இடங்கள் முழுமையான போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தப்போதும் மக்கள் எப்போதும் பிஸியாக இருக்கும் பகுதியில் நடைபெற்ற இச்சம்பத்தின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை.. இந்நிலையில் இதுக்குறித்து அந்நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவிக்கையில், மர்ம நபர்கள் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்குதலினால் மக்கள் மிகுந்த அதிர்ச்சியிலும் அச்சத்திலும் உள்ளனர். எனவே இதுக்குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நார்வே நாட்டில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.