Viral news: கடற்கரையில் நிர்வாணமாக பெண் உடலா? ஷாக்கான மக்கள்! ஆனால் நடந்த கதையே வேறு!!
கடற்கரையில் கிடந்த செக்ஸ் பொம்மையை பார்த்து பெண் சடலம் என்று மக்கள் நினைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Viral news: கடற்கரையில் நிர்வாணமாக பெண் உடலா? ஷாக்கான மக்கள்! ஆனால் நடந்த கதையே வேறு!! Thailand: doll in Thailand Beach creates shock among beach visitors as it looked alike a women without head Viral news: கடற்கரையில் நிர்வாணமாக பெண் உடலா? ஷாக்கான மக்கள்! ஆனால் நடந்த கதையே வேறு!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/27/3f2283adb241d49d7607a09733122c3f1661571174788224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடற்கரையில் பொதுமக்கள் கூடுவது எப்போதும் வழக்கமான ஒன்று. அப்படி அதிக மக்கள் கூடிருக்கும் போது நீரிலிருந்து பெண் சடலம் போன்ற ஒன்று அடித்து கரைக்கு வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அங்கு பார்த்த காவல்துறையினர் அது பெண்ணின் சடலம் இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சில நேரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பிரபலமான கடற்கரைகளில் பாங்க் சென் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையும் ஒன்று. இந்த கடற்கரையில் கடந்த 18ஆம் தேதி ஒரு பெண் சடலம் போன்ற ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதை பார்த்த அங்கு இருந்த மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அது முதலில் தலையில்லாமல் இருந்துள்ளது.
மேலும் படிக்க: பெகசஸ் விவகாரத்தில் அரசு ஒத்துழைக்கவில்லை! : விசாரணைக்குழு புகார்
இதன்காரணமாக அது ஒரு பெண் சடலமாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்துள்ளனர். எனினும் அதன் அருகில் சென்று பார்த்த போது பெண் சடலம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அது ஒரு செக்ஸ் பொம்மை என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதன் தலை துண்டிக்கப்பட்டிருந்ததால் மக்கள் அதை தவறாக பெண் சடலம் என்று நினைத்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பொம்மை ஜப்பான் நாட்டில் விற்பனை செய்யப்பட்டும் வகை பொம்மை என்று காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்த பொம்மை சுமார் 500 அமெரிக்க டாலர் வரை விலை மதிப்பு கொண்டது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதை கடலுக்குள் யாராவது ஒருவர் வீசியிருப்பார் என்று கூறியுள்ளனர். இந்த செக்ஸ் பொம்மையை பார்த்து பொதுமக்கள் பலரும் முதலில் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
செக்ஸ் பொம்மையைக் காப்பாற்ற கடலில் குதித்த முதியவர்! கடைசியில் ஷாக்:
கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் பெண் ஒருவர் தண்ணீரில் மிதந்தது தவித்து கொண்டு இருப்பது போல் தோன்றியுள்ளது. இதை பார்த்த ஒரு 67 வயதான கிறிஸ் ஃபோர்ட் என்ற முதியவர் அந்தப் பெண்ணை காப்பாற்ற தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கியுள்ளார்.
தண்ணீரில் நீண்ட தூரம் நீந்தி அந்தப் பெண் உருவத்திற்கு அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது தான் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது அந்த நபர் காப்பாற்றியது பெண் அல்ல என்பது அவருக்கு மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது. அவர் காப்பாற்றியது பெண் உருவத்தில் உள்ள ஒரு செக்ஸ் பொம்மை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பொம்மையில் தலையில்லாமல் இருந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் வைரலானது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் செக்ஸ் பொம்மை தொடர்பான சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜாம்பிக்கள் நாம் வாழும் உலகத்துலேயே இருக்கா?! அலறவைக்கும் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)