ஆன்லைன் வகுப்பின்போது உடலுறவு.. ஆஃப் ஆகாத கேமராவால் சிக்கிய இளைஞர்!
ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும்போது சரியான ஒழுக்கத்தையும் பொருத்தமான நடத்தையையும் கடைப்பிடிக்குமாறு மாணவர்களுக்கு நினைவூட்டியது.
ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர், தனது காதலியுடன் உடலுறவில் இருந்தார். அப்போது, கேமிராவை அவர் ஆஃப் செய்ய மறந்துவிட்டார். பின்னர் தனது பேராசிரியர் கூச்சலிட்டபின் தனது தவறை உணர்ந்து கேமராவை ஆஃப் செய்கிறார். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
கொரோனா தொற்றுநோய்க்கு நடுவில், மக்கள் முழுமையாக வீட்டுக்குள்ளேயே வாழும் வாழ்க்கை முறையில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அலுவலகங்கள் ‘WorkFromHome' என்ற முறையில் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு மூலமே தொடர்ந்து வருகிறது. இதனால், பல விநோதமான சம்பவங்களும் நடைபெறுகிறது. அப்படி ஒரு வினோத சம்பவம் வியட்நாமில் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆன்லைன் வகுப்பின் போது, கல்லூரி மாணவர் ஒருவர் பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டார். இந்த வினோதமான சம்பவம் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்றுள்ளது.
மாணவர் பெண்ணுடன் உடலுறவு கொண்டபோது, கேமராவை ஆஃப் செய்ய மறந்துவிட்டார். பின்னர் தனது பேராசிரியர் கூச்சலிட்டபின் தனது தவறை உணர்ந்து கேமராவை ஆஃப் செய்துவிட்டார். அவரின் இந்த செயலால் பேராசிரியர் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆன்லைன் செக்ஸ் வீடியோவில் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஆன்லைனில் கசிந்தது. மாணவரின் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கசிந்தது.
America Independence Day: வானம் முழுக்க வண்ண வேடிக்கைகள்! - கொண்டாட்டத்தில் அமெரிக்க சுதந்திர தினம்
இந்த சம்பவத்தால் மாணவர் மீது கோபமடைந்த பேராசிரியர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நேரடியாக வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் இருக்கிறோம், நீங்கள் உடலுறவு கொள்கிறீர்கள்” என்று கோபத்துடன் கூறியதாக கத்தியதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கேமராவைப் பற்றி அறியாத மாணவர், பேராசிரியர் கூச்சலிட்டபின் தனது தவறை உணர்ந்து, பின்னர், ஆடைகளை அணிந்து கொண்டு கேமராவை ஆஃப் செய்தார். மேலும், இந்த சம்பவத்திற்காக மாணவர் தனது பேராசிரியர் மற்றும் அவரது வகுப்பு தோழர்களுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியதாக வியட்நாமிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகமும் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும்போது சரியான ஒழுக்கத்தையும் பொருத்தமான நடத்தையையும் கடைப்பிடிக்குமாறு மாணவர்களுக்கு நினைவூட்டியது. மேலும் மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இணையத்தில் பரவும் வீடியோவை பகிர வேண்டாம் என்று அவர்கள் மக்களை வலியுறுத்தினர்.
Sirisha Bandla Fly into Space: விண்வெளிக்கு பறக்கப்போகும் சிர்ஷா பாண்டலா யார் தெரியுமா?