மேலும் அறிய

Rajapaksa Escape : நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம்! உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பிச்செல்ல ராஜபக்சே திட்டம்?

Rajapaksa Escape : பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்சே மக்களின் போராட்டத்தால் உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான வீட்டை பொதுமக்கள் நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர். இந்த நிலையில், கொழும்பில் உள்ள பிரதம மந்திரிக்கு சொந்தமான அலரி மாளிகையில் இருந்து பலத்த ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்சே வெளியேறினார்.

முன்னதாக நைஜீரியா நாட்டில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகாலையில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் மூலமாக ராஜபக்சே வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களை கூறி அவர் தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Rajapaksa Escape : நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம்! உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பிச்செல்ல ராஜபக்சே திட்டம்?

முன்னதாக, இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், கடுமையான அவதிக்குள்ளாகிய மக்கள் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ராஜபக்சே குடும்ப அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று அமைதியாக போராடிய பொதுமக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் அவர்கள் மீது போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், இலங்கையே வன்முறை பூமியாக மாறியது. மக்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போராட்டத்திற்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.


Rajapaksa Escape : நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம்! உயிருக்கு பயந்து வெளிநாடு தப்பிச்செல்ல ராஜபக்சே திட்டம்?

மக்களின் போராட்டத்தை எதிர்த்த ஆளுங்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அத்துகொரலா மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அவரை துரத்திச் சென்றனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கு பயந்த எம்.பி. அமரகீர்த்தி  தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அமைச்சர், அரசியல் தலைவர்கள் உள்பட 35 பேரின் இல்லங்களுக்கு தீ வைத்து எரித்தனர். தற்போது இலங்கை அரசுக்கு எதிராக கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 1000 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget