பொருளாதாரமே இல்லாத போது சீர்திருத்தங்களில் அர்த்தமில்லை: இலங்கை அதிபர்
அண்மைக் காலமாக இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவுக்குச் சென்றுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வது இயலாது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவுக்குச் சென்றுள்ள நிலையில், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வது இயலாது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. ஏப்ரல் மாத மத்தியில் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கை தனது சர்வதேச கடனை திருப்பி செலுத்தவில்லை என்று அறிவித்தது.
இலங்கை அதிபராக இருந்த கோத்தயபய ராஜபக்ச பதவி விலகினார். முன்னதாக, பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இலங்கை பொருளாதார மாநாடு 2022, இன்று நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்று அதிபர் ரணில் விக்ரமசிங்க பேசியதாவது:
பொருளாதார சீர்திருத்தங்கள் தற்போதைய சோகத்திற்கு மாற்று மருந்தாக இருக்காது. சரி, சீர்திருத்த திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ன? வெளிப்படையாக சொன்னால் என்னிடம் அதற்கான திட்டம் எதுவும் இல்லை. பொருளாதாரமே சீர்குலைந்து இருக்கிற போது என்ன சீர்திருத்தங்களை கொண்டுவந்த என்ன பயன் கிடைக்கப் போகிறது.
நாங்கள் புதிய பொருளாதாரத்தை உருவாக்க விரும்புகிறோம். அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிப்பதே நமது அரசாங்கத்தின் முக்கிய சீர்திருத்த இலக்காக இருக்கும். இலங்கையை ஒரு தளவாட மையமாக மேம்படுத்துவதும் காலத்தின் தேவையாக இருக்கிறது.
Oxford Word : ஆக்ஸ்ஃபோர்ட்டின் இந்தாண்டுக்கான வார்த்தை இதுதான்; தெரிஞ்சிக்கலாம் வாங்க!
நாங்கள் இப்போது எங்கள் கடன் வழங்குநர்களிடம் ஆலோசித்து வருகிறோம். இந்தியாவுடன் விவாதித்து வருகிறோம். நாங்கள் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறோம். சீனாவுடனும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறோம்” என்று ரணில் விக்ரமசிங்க பேசினார்.