மேலும் அறிய

Roshan Ranasinghe: இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கம்: அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு!

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (நவம்பர் 27) பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க:

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு அரசியல் காரணிகளால் அந்நாட்டில் நிகழும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இச்சூழலில், இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் ஏமாற்றம் அடைந்த இலங்கை விளையாட்டுத் துறை தங்களுடைய கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது. முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சம் அறிவித்திருந்தது.

அதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இலங்கை கிரிக்கெட் அணியை விரைவில் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதியளித்தனர்.

ஐசிசி அறிவிப்பு:

இச்சூழலில், நீதிமன்றம் விளையாட்டு அமைச்சகத்தின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தான் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளை இலங்கை அணி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் அது தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படும் என்றும் ஐசிசி கூறியது.

அதிபர் மீது குற்றச்சாட்டு:

இது போன்ற சூழலில் தான் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தன்னுடைய உயிருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆபத்து உள்ளது என்று தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.  மேலும், எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதிபர் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பதவி நீக்கம்:

இந்நிலையில் , நேற்று (நவம்பர் 27) அந்நாட்டின் அமைச்சரவை கூடியது. அப்போது அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இளைஞர் விவகாரம், நீர்ப்பசனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக உத்தரவிட்டார்.

தற்போது இந்த உத்தரவை அடுத்து, “இலங்கை கிரிக்கெட்( Sri Lanka cricket ) நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் மற்றும் மோசடிகளை நான் வெளிக்கொண்டு வருகிறேன். அதனால் தான் நான் நீக்கப்பட்டுள்ளேன்” என்று  ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget