மேலும் அறிய

Srilanka Crisis : இன்று அதிபர் கோட்டபய ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா..? இலங்கையில் தொடரும் பதற்றம்!

அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கும் தயார் என SJB தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்சே பதவி விலகி குடும்பத்துடன் தலைமறைவானார். இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக கடந்த 12-ஆம் தேதி ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

இந்த போராட்டத்தில் கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இலங்கையின் பிரதமராக பொறுப்பு வகித்த ராஜபக்ச வீட்டை தீ வைத்து கொளுத்தினர். மேலும், மஹிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உயிருக்கு பயந்து தனது குடும்பத்துடன் தலைமறைவானார். 

Srilanka Crisis : இன்று அதிபர் கோட்டபய ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா..? இலங்கையில் தொடரும் பதற்றம்!

கோட்டபய அரசில் அனைவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கோட்டபய மட்டும் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார். இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மே 17 ம் தேதியான இன்று அதிபர்  கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் கடந்த மே 12-ஆம் தேதி தகவல் தெரிவித்தது. எனினும் புதிதாக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். இதனால் அதிபர் கோட்டபய ராஜபக்சவிற்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் வர வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது.  

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான SJB கடந்த வெள்ளிக்கிழமை, அதிபர் ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கப்போவதாக அறிவித்தது. மேலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் பொதுமக்களின் கவலைகளுக்கு தீர்வு காணத் தவறினால், அதிபர் ராஜபக்சவின் பதவியை பறிக்கவேண்டும் என்று தெரிவித்தது. 

Srilanka Crisis : இன்று அதிபர் கோட்டபய ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா..? இலங்கையில் தொடரும் பதற்றம்!

அதிபர் மற்றும் முழு ராஜபக்ச குடும்பத்தில் இருந்து அரசாங்க பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தொடரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது. 

"ராஜபக்ஷக்கள் பதவி விலக வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும், இல்லையென்றால் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவோம்" என்று சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ராஜபக்சவை அதிபராக நீடிக்கும் இடைக்கால அரசை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசா தெரிவித்துள்ளார். அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கும் தயார் என SJB தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், SJB சார்பில் அவர் நாடாளுமன்றத்தில் முன்மொழிவுகள் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

1948-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை இத்தகைய மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Embed widget