Watch Video: 'நீ நனைஞ்சா பரவாயில்ல... நான் நனையக்கூடாது..' பாரீஸில் பாகிஸ்தான் பிரதமர் செய்த செயல்..!
பிரான்ஸ் நாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செய்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
Watch Video : பிரான்ஸ் நாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செய்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.
பாகிஸ்தான் நிலைமை
பாகிஸ்தான் நாட்டில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அங்கு விலைவாசி உச்சத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வால் சொந்த நாட்டில் இருந்து மக்கள் வேறு இடத்திற்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கிட்டத்தட்ட திவால் ஆகும் ஆபத்து கூட இருப்பதால் பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சர்வதேச நாடுகளிடம் உதவிகளையும் கேட்டு வருகிறது.
மழையில் நினைந்த பெண்
இந்நிலையில், ஐரேப்பாவின் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாலைஸ் ப்ரோக்னியார்ட் என்ற இடத்தில் உலகளாவிய நிதி ஒப்பந்த உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வந்திருந்தார். அப்போது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்திருந்தார். அவர் வந்திருந்த போது பாரீஸில் மழை பெய்து கொண்டிருந்தது.
pic.twitter.com/j8Kjmi0FAn Pakistan PM took away the umbrella from the lady escorting him and left her behind in rain ! 🤣🤣#Pakistan #Clown @pmo
— Singh 🏴☠️🕊️ (@singh82471768) June 22, 2023
மழை பெய்து கொண்டிருந்ததால், அவரை அழைத்து செல்ல பெண் ஒருவர் குடையுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த அவர், காரில் இறங்கியதும் அந்த பெண்ணிடம் இருந்து குடையை வாங்கி கொள்கிறார். குடையை வாங்கிவிட்டு ஷெரீப் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல தொடங்கினார்.
இதனை அடுத்து, அந்த பெண் சங்கடத்தில் மழையில் நனைத்தப்படியே ஷெபாஸ் ஷெரீப்புக்கு பின்னால் நடத்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் பிரதமர் அலுவலத்தின் அதிகாரப்பூர்வ பக்கமே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தாக்கும் நெட்டிசன்கள்
இதற்கு நெட்டின் ஒருவர், ”பெண்ணிடம் இருந்து குடையை பிடுங்கி அவரை மழையில் நனையவிட்டார் பாகிஸ்தான் பிரதமர். இது அந்நாட்டிற்கே அவமானம்" என்று சாடியுள்ளார்.
அதேபோல மற்றொருவர், ”அந்த பெண்ணிடம் இருந்து குடையை வாங்க வேண்டிய அவசியம் என்ன? நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்வது தான் அந்த பெண்ணின் வேலை. அப்படியிருக்கும்போது அவர் எதற்காக குடையை வாங்கினார் என புரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.