இரட்டை கோபுர தாக்குதல்: கொல்லப்பட்ட இருவரை 20 ஆண்டுகளுக்கு பின் அடையாளம் கண்ட விஞ்ஞானிகள்!
”இன்னுமொரு அதிர்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால் குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை”
அமெரிக்காவின் நியூ யார்க் நகரம்.... காலை 8:45 மணி..... வழக்கமாக பரபரப்புடன் மக்கள் பணிகளுக்கு சென்றுகொண்டிந்தனர்.... அந்த நாள் அவர்களுக்கு சாதாரண நாளாக அமையவில்லை.... எங்கிருந்தோ வந்த பயணிகள் விமானம் ஒன்று ஆயிரத்து 362 அடி உயர இரட்டை கோபுரங்களின் மீது மோதியது... 7 வினாடிகளுக்குள் 47 மாடிக்கட்டிடம் சுக்கு நூறாக இடிந்து தரைமட்டமானது.... 2 ஆயிரத்து 753 பேர் துடிதுடிக்க கொல்லப்பட்டனர்... 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.... பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்.....
நிலைக்குலைந்தது அமெரிக்கா... ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் உலக வல்லரசாக திகழ்ந்த அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து உலக நாடுகள் பீதியடைந்தன. தங்கள் நாடுகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் பின் தங்கிய, வளரும் நாடுகளிடையே எழுந்தன.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு சவால் விட்ட இந்த தாக்குதலுக்கு ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பு தான் காரணம் என குற்றம்சாட்டியது அமெரிக்க புலனாய்வு துறையான FBI. ஆனால் இந்த தாக்குதலை ஆய்வு செய்த பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், உளவுத்துறையினர் பலர் இரட்டை கோபுரங்கள் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது என்றனர். இரும்பு உலோகங்களால் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை கோபுரங்கள் 2 ஆயிரம் செண்டி கிரேட் வெப்பத்திலும் உறுதியுடன் இருக்கும் என இதனை கட்டிய நிறுவனம் தெரிவித்திருந்தது.
நிலைமை இப்படி இருக்க இரட்டை கோபுரங்களை ஒரு சாதாரண பயணிகள் விமானத்தால் தகர்க்கப்பட முடியாது என இதனை ஆய்வு செய்த 77 அமெரிக்க பேராசிரியர்களின் குழு அறிக்கை வெளியிட்டனர். இது குறித்து ஆய்வு செய்த ஸ்டீவ் ஜான் என்ற பேராசிரியர், 3000 செண்டி கிரேட் வெப்பத்தில் உருகாத விமான கருப்பு பெட்டியை அமெரிக்க அரசு திட்டமிட்டே மறைத்து விட்டதாகவும், அது கைப்பற்றப்பட்டால் விபத்துக்கான காரணம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். இதன் பின்னனியில் இஸ்ரேல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்றுடன் இந்த தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், அதன் நினைவுகள் உலக மக்கள் மனதில் ஆராத வடுவாகவே உள்ளது. இதில் இன்னுமொரு அதிர்ச்சிக்குரிய விசயம் என்னவென்றால் குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தற்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால் கோரத் தாக்குதல் நடந்த இடத்தில் கிடைத்த மாதிரிகளை கொண்டு இறந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
அந்தவகையில் தற்போது மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். முதலாவது நபர் டோரதி மோர்கன் என்ற பெண். டி.என்.ஏ. மாதிரி மூலம் அவர்தான் என ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தி இருக்கின்றனர். 2-வது நபர் ஒரு ஆண். அவரது பெயரை வெளியிட குடும்பத்தினர் விரும்பாததால் ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்த இருவருடன் சேர்த்து மொத்த 1,646 பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றனர்.
இந்த மனிதாபிமானமற்ற கோரத்தாக்குதலின் பின்னனியில் இருப்பது தீவிரவாதிகளின் திட்டமா அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியா என்பது புரியாத புதிராகவே உள்ளது. யாராக இருந்தாலும், ஒரு சிலரின் அரசியல் பசிக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலி கொடுக்கப்பட்டனர் என்பதே நிதர்சனமான உண்மை....