மேலும் அறிய

இலங்கையின் புதிய அதிபர் யார்? களத்தில் சிறிசேனா - சஜித்! உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல்களம்!

தன்னிடம் பல கட்சிகள் வலியுறுத்தியதால் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடப் போவதாக எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார். 

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.  நிலைமை இப்படியிருக்க கடந்த வாரம் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றினர். ஆனால் தகவலறிந்து கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பியோடி நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் மாலத்தீவுக்கு சென்ற அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது கோத்தபய சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார். 

அதேபோல் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. ரணில் தற்போது இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச தனது ராஜினாமா கடிதத்தை தூதரகம் வாயிலாக இலங்கை சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார். இதனையடுத்து அங்கு அதிபர் பதவிக்கு தகுந்த நபர் யார் என்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. 

புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 20 ஆம் தேதி கூடும் என்றும், அன்றைய தினம் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இலங்கையில் மக்களால் மட்டுமே அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது இலங்கையிலுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாலே அதிபர் தேர்வு செய்யப்படவுள்ளார். எனவே மீண்டும்  ராஜபக்ச தரப்பின் கைமேலோங்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச, அவரது ஆதரவு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பெரும்பான்மை நபர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் ஆதரவு யாருக்கு செல்லும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.ரணில் விக்ரமசிங்கவா? அல்லது முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவா அல்லது புதிய ஒரு நபரா என்ற குழப்பம் நிலவி வருகிறது. முன்னதாக தன்னிடம் பல கட்சிகள் வலியுறுத்தியதால் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தானும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக தமிழ் தரப்பினர் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் ,முஸ்லிம் காங்கிரஸ், உள்ளிட்ட சில கட்சிகள்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கோத்தபய ராஜபக்ச குடும்பத்தினர் வசம் இருந்தாலும் உண்மை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget