Ukraine-Russia: உக்ரைனில் சிக்கும் ரஷ்ய வீரர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு.. வழக்கறிஞரின் உத்தரவால் சர்ச்சை
ரஷ்ய ராணுவத்தினரின் விதைகளை நீக்குங்கள் என்று மருத்துவர்களுக்கு மொபைல் மருத்துவமனை உரிமையாளர் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனில் சிக்கும் ரஷ்யர்களின் விதைப்பைகளை நீக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்து ஒருமாதத்தை நெருங்கும் நிலையில் போர் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடியும் நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனில் சிறைபிடிக்கப்படும் ரஷ்ய ராணுவ வீரர்களின் விதைப்பைகளை நீக்கி, மலட்டுத்தன்மையை உருவாக்குமாறு கிழக்கு உக்ரைனில் செயல்பட்டுவரும் மொபைல் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளர் அவரது மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். வழக்கறிஞராக இருந்து வரும் இவர் தற்போது போர் காரணமாக ஒரு மொபைல் மருத்துவமனையை தொடங்கி சேவை அளித்து வருகிறார். அதில் இருக்கும் மருத்துவர்களுக்கு இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.
இது குறித்து உக்ரைன் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள கென்னடி ட்ருசென்கோ என்பவர், ‘நான் ஒரு சிறந்த மனிதாபிமானி. ஒருவர் காயமடைந்துவிட்டால் அவர் எதிரியாகவே இருந்தாலும் நோயாளியாகவே கருதப்படுவார்; ஆனால், இப்போது சிக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் பொதுமக்கள் அல்ல கரப்பான் பூச்சிகள்’ என்று கூறியுள்ளார். மேலும் மருத்துவர்கள் நோயாளிகளை காப்பாற்றுவார்கள். ஆனால், ரஷ்யர்கள் இங்கு உயிரிழப்பார்கள். ஜெர்மானியர்களுக்கு ஸ்டாலின்க்ராட் எப்படி சிம்ம சொப்பனமாக இருந்ததோ அதே போன்று, இங்கு வரும் ரஷ்யர்கள் உக்ரைன் அவர்களுக்கு சிம்ம சொப்பனம் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
2014 முதல் இவரது மொபைல் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றியிருக்கின்றனர். வழக்கறிஞரான இவர் மொபைல் மருத்துவமனையை உருவாக்கி போர் நடக்கும் கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பியிருக்கிறார் ட்ருசென்கோ.
ட்ருசென்கோவின் இந்த பேட்டி ரஷ்யாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவில் இந்த பேச்சை விசாரிப்பதற்காக குழு ஒன்று ஒருவாக்கப்பட்டிருக்கிறது. ட்ருசென்கோ ரஷ்யாவிடம் சிக்கும் பட்சத்தில் அவர் ரஷ்ய சட்டங்களின் படி இந்த வழக்கை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதோடு, விளாடிமிர் புதினின் பல்கலைக்கழக நண்பரான அலெக்ஸாண்டர் பாஸ்ட்ரிகின் என்பவரது தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ட்ருசென்கோவின் இந்த பேச்சு மருத்துவத்துறைக்கான சட்டம் மற்றும் நியதிக்கு மாறுபாடானது என்று குற்றம்சாட்டியுள்ளதோடு அவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.- அதோடு, சர்வதேச அளவில் தேடப்படும் நபராக ரஷ்யாவால் ட்ருசென்கோ அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:`509 பீரங்கிகள், 123 ஹெலிகாப்டர்கள்’ - ரஷ்யாவின் இழப்பு பட்டியலை வாசித்த உக்ரைன் படைத்தளபதி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்