மேலும் அறிய

PUTIN ON UKRAINE: “உக்ரைனை மேற்கத்திய நாடுகள் இதற்குதான் பயன்படுத்துகிறது” : ரஷ்ய அதிபர் புதின் குற்றச்சாட்டு

ரஷ்யாவை அழிக்க மேற்கத்திய நாடுகள் முயற்சிப்பதாக, அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர்:

அண்டை நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், கடந்த மார்ச் மாதம் தொடங்கி 9 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரானது தொடங்கிய சில நாட்களிலேயே முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவிற்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி அளித்து வருகிறது. அண்மையில், இந்த போர் தொடர்பாக பேசிய புதின், உக்ரைன் உடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயார் நிலையில் உள்ளதாகவும், சிலர் அதனை தடுப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

பொய் கூறும் மேற்கத்திய நாடுகள்:

இந்நிலையில், புத்தாண்டையொட்டி ரஷ்யா நாட்டு மக்களுக்காக, அதிபர் புதின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த 20 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆட்சி பொறுப்பில் உள்ள புதின், இதுவரை இல்லாத அளவிற்கு ஒன்பது நிமிடங்களுக்கு புத்தாண்டு உரையாற்றியுள்ளார். அதில், மேற்கு நாடுகள் ரஷ்யாவிடம் பொய் கூறுகிறது. உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளை  ரஷ்யாவை தூண்டுகிறது.

பல ஆண்டுகளாக மேற்கத்திய உயர்குடி மக்கள் பாசாங்குத்தனமாக, அமைதி தொடர்பாக நம்மிடம் பேசி வருகின்றனர். ஆனால், உண்மையில், சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்கள் டான்பாஸில், பொதுமக்களுக்கு எதிராக வெளிப்படையான தீவிரவாதிகளை வழிநடத்தும் நவ-நாஜிக்களை மேற்கத்திய நாட்டினர் ஊக்குவிக்கின்றனர்.

உக்ரைனை பயன்படுத்தும் மேற்கத்திய நாடுகள்:

ஆனால், ரஷ்யாவை அழிக்கும் கருவியாக உக்ரைனைப் பயன்படுத்தும் மேற்குலகின் முயற்சிகளுக்கு தனது நாடு ஒருபோதும் அடிபணியாது. அதோடு, ரஷ்யா தனது தாய்நாட்டைப் பாதுகாக்கவும், அதன் மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை பெறவும் உக்ரைனில் போராடுகிறது என புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தீவிர தாக்குதல்:

இதனிடையே, உக்ரைனில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கீவ் நகரின் மீது,  ரஷ்யா மீண்டும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா ஏவிய 20 குரூயிஸ் ஏவுகணைகளில் 12-ஐ சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கியதற்குப் பிறகு ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.

ஜெலன்ஸ்கி சாடல்:

இதுதொடர்பாக பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யர்களின் எதிர்காலத்தை அந்நாட்டு அதிபர் புதின் அழித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய படைகளை வழிநடத்துவதற்குப் பதிலாக, அதன் பின்னே புதின் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார். சனிக்கிழமை உக்ரைன் முழுவதும் ரஷ்யா குண்டுமழை பொழிந்ததாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை உக்ரைன் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
Russia Vs Ukraine: உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
உக்ரைனில் இந்திய மருந்து ஆலையை ஆளில்லா விமானத்தால் போட்டு சாத்திய ரஷ்யா; ரூ.400 கோடி அவுட்.!
Trump Warns Iran: “பூப் பாதையா.? சிங்கப் பாதையா.?, நீங்களே முடிவு பண்ணுங்க“: ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை
“பூப் பாதையா.? சிங்கப் பாதையா.?, நீங்களே முடிவு பண்ணுங்க“: ஈரானுக்கு ட்ரம்ப் புதிய எச்சரிக்கை
Kuwait Ship Attacked Hormuz: ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்
ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்ட குவைத் எண்ணெய் கப்பல்; 5 இந்திய மாலுமிகளின் நிலை என்ன.? விவரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget