ஹிரோஷிமாவில் காந்தி சிலை திறந்துவைக்கவுள்ள பிரதமர் மோடி… G7 மாநாட்டையொட்டி மோடியின் திட்டங்கள்!
"பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார்," என்றார்.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தகவல் தெரிவித்தார்.
G7 மாநாடு
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மே 19 முதல் 21 வரை ஜப்பான் செல்ல உள்ளார். அதற்கான சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் போது வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா நிருபர்களிடம் கூறியதாவது, "பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார். ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை அவர் திறந்து வைக்க உள்ளார். நாங்கள் ஹிரோஷிமாவில் குவாட் தலைவர்களின் கூட்டத்தைத் திட்டமிட்டுள்ளோம். அவரது மூன்று நாடுகளுக்கான பயணத்தின் இரண்டாவது கட்டமாக பப்புவா நியூ கினியாவிற்கும் பின்னர் ஆஸ்திரேலியாவிற்கும் செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும் G7 இல் பல தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார்," என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும், "சிட்னியில் திட்டமிடப்பட்ட குவாட் உச்சி மாநாடு அங்கு நடைபெறவில்லை. தற்போது ஹிரோஷிமாவிற்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.
விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள்
"கடந்த குவாட் உச்சிமாநாட்டில் தலைவர்கள் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சி நிரல், ஹிரோஷிமாவில் குவாட் உச்சிமாநாட்டை சரியான நேரத்தில் நடத்த முடிந்தால் விவாதிக்கப்படும். இடம் மாற்றம் உள்ளது, ஆனால் ஒத்துழைப்பின் பின்னணி மற்றும் குறிப்பிட்ட மற்ற அம்சங்கள் மாறாது," என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் பப்புவா நியூ கினியா பயணத்தின் முக்கிய சிறப்பம்சம், இந்தோ-பசிபிக் தீவு ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (ஐபிஐசி) மூன்றாவது உச்சிமாநாடு ஆகும். இதற்கான விவாதம் பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப்புடன் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மோடியின் பயண திட்டம்
PNJ பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி மே 22-24 தேதிகளில் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அவர் மே 23 அன்று சிட்னியில் நடைபெறும் சமூக நிகழ்வில் ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் உரையாடவும், புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் இந்தியா கொண்டுள்ள தற்போதைய கட்டமைப்பு ஒப்பந்தத்தை மேம்படுத்துவது குறித்து, குவாத்ரா மேலும் கூறினார், "இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மையின் பிற கூறுகளை அடிப்படையாகக் கொண்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கிறோம். இந்த பயணத்திற்கு முன்னர் அந்த நோக்கத்தை எங்களால் அடைய முடியுமா என்று நான் உறுதியாக கூறுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்பவர்கள்
மோடி கடந்த காலத்தில் பியாரிட்ஸ், ஃபிரான்ஸ் (2019) மற்றும் ஜெர்மனியின் எல்மாவ் (2022) என இரண்டு முறை G7 உச்சிமாநாட்டில் நேரடியாக கலந்து கொண்டார். மற்றும் ஒரு முறை (கார்ன்வால், யுகே-2021) காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். ஆதாரங்களின்படி, ஜி20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியாவைத் தவிர, ஜி7 குழு உறுப்பினர்களான ஜப்பான், இத்தாலி, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரேசில், கொமோரோஸ் (ஆப்பிரிக்க யூனியன் தலைவர்), குக் ஆகியோரை அழைத்துள்ளன. பசிபிக் தீவுகள் மன்றத்தின் தலைவர், இந்தோனேசியா ஆசியான் தலைவர், தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகியவை அவுட்ரீச் அமர்வுக்கு அழைப்பாளர்களாக உள்ளன. UN, IMF, World Bank, WHO மற்றும் WTO ஆகியவையும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.