Russia EarthQuake: ரஷ்யாவில் சுனாமி.. 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், குலுங்கிய கட்டிடங்கள், பரபரப்பான வீடியோக்கள்
Russia EarthQuake Tsunami: ரஷ்யாவில் பதிவான பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் ஏற்பட்டு, கடல் நீர் சில இடங்களில் ஊருக்குள் புகுந்துள்ளது.

Russia EarthQuake Tsunami: ரஷ்யாவில் பதிவான பயங்கர நிலநடுக்கம் காரணமாக, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மக்களை அப்புறப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்:
ரஷ்யாவில் ஆழமான கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா பெனிசுலா பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 8.7 ஆக இது பதிவாகியுள்ளது. ரஷ்யாவில் பதிவான மிகவும் வலுவான நிலநடுக்கமாகவும், சர்வதேச அளவில் கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாகவும் இது கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சுமார் 4 மீட்டர் (13 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு கட்டிடங்கள் சேதமடைந்தன. சுனாமி பாதிப்பு தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அப்பகுதியிலும், ஜப்பானின் கிழக்கு கடற்கரையின் பெரும்பகுதியிலும் வெளியேற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
A video shows the tsunami already reaching Petropavlovsk-Kamchatsky, Kamchatka, Russia, following the massive earthquake pic.twitter.com/G3mLFUk5dn
— Faytuks Network (@FaytuksNetwork) July 30, 2025
குலுங்கிய கட்டிடங்கள்:
நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கட்டிடங்கள் குலுங்க அதில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சுவற்றில் அடித்துக் கொள்ளும் சத்தம் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. திறந்தவெளியில் நிறுத்தப்பட்ட இருந்த வாகனங்கள் கூட குலுங்கியபடி காட்சியளித்தன. ஒரு மருந்து அங்காடியில் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த ஒட்டுமொத்த பொருட்களும் கீழே அமர்ந்திருந்த பெண் விற்பனையாளர் மீது விழுந்த காட்சிகள், இந்த நிலநடுக்கம் எவ்வளவு வலிமையானது என்பதை காட்டுகிறது. குரில்ஸ்க் எனும் பகுதியில் கடல்நீர் புகுந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
🚨BREAKING: Massive 8.0 quake strikes off Kamchatka, Russia.
— mdtlion (@mdtlion) July 30, 2025
Part of the volatile Ring of Fire, this region has a deadly history—1952, 1959, now 2025.
Tsunami alerts issued for Russia, Japan, Hawaii, Alaska, and Guam. NOAA’s DART 4G sensors triggered within minutes.… pic.twitter.com/Se3ioqk8ic
மழலையர் பள்ளி சேதம்:
"இன்றைய நிலநடுக்கம் கடுமையானதாகவும், பல தசாப்த கால நிலநடுக்கங்களில் மிகவும் வலிமையானதாகவும் இருந்தது. இதனால் ஒரு மழலையர் பள்ளியும் சேதமடைந்துள்ளது" என்று கம்சட்கா ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிமீ (12 மைல்) ஆழத்தில் , அவாச்சா விரிகுடாவின் கடற்கரையில் 165,000 மக்கள் வசிக்கும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியின் கிழக்கு-தென்கிழக்கில் 126 கிமீ (80 மைல்) தொலைவில் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான முழு விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
Breaking - 8.7 Magnitude Earthquake off Russia’s Kamchatka Peninsula.
— Kevin W. (@Brink_Thinker) July 30, 2025
Tsunami warning for Hawaii and watches along the West Coast of United States.#earthquake #russia
pic.twitter.com/wakpQzpgFe
A Tsunami Watch Has been Issued for The West Coast of The United States. The Whole State of Hawaii And a Warning in The Far East of Russia After a Now Reported 8.7 Magnitude Earthquake Off The Coast of Kamchatka, Biggest Since 2011.
— Sputnik (@VasBroughtToX) July 30, 2025
Alerts Japan, Alaska and Guam as Well. Prayers. pic.twitter.com/90R0BpCyeL
சுனாமி எச்சரிக்கை விடுத்த நாடுகள்:
பல தசாப்தங்களில் பதிவான வலுவான நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளின் சில கடற்கரைகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் "ஆபத்தான சுனாமி அலைகள்" ஏற்படும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அமெரிக்க தீவுப் பகுதியான குவாம் மற்றும் மைக்ரோனேஷியாவின் பிற தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹவாய் மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் சில கடலோர பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் உத்தரவிட்டுள்ளது. கம்சட்காவும் ரஷ்யாவின் ஆழமான கிழக்குப் பகுதியும் பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளன. இது புவியியல் ரீதியாக சுறுசுறுப்பான பகுதியாகும், இது பெரிய பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு ஆளாகிறது.





















