Philippine Flood: பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் 13 பேர் உயிரிழப்பு.. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்..
தெற்கு பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் தின மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
தெற்கு பிலிப்பைன்ஸில் கிறிஸ்துமஸ் தின மழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர், வெள்ளம் குறையத் தொடங்கியதால் இன்னும் 23 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Hi. Misamis Occidental, Philippines needs your help. Our province have been experiencing nonstop heavy rains and floods since last 12/24.
— sohee’s lover 🦋 (@kdramaluvrr) December 26, 2022
A retweet is highly appreciated!🥺#MisamisOccidentalNeedsHelp pic.twitter.com/yVu6b8HLW6
இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சீர்குலைந்து, 45,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். பெரும்பாலான இறப்புகள் திடீர் வெள்ளத்தில் மூழ்கியதால் ஏற்பட்டதாக பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கடும்மழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் உள்ள படங்கள் கடலோரக் காவல்படை, காவல்துறை மற்றும் தீயணைப்புப் வீரர்கள் இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளிப்பதையும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் குடியிருப்பாளர்களைக் மீட்பதையும் காட்டுகின்றது.
அருகில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், விவசாயத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என மிசாமிஸ் ஆக்சிடென்டல் மாகாணத்தில் உள்ள கிளாரின் நகரில் பேரிடர் அமைப்பின் தலைவர் கார்மெலிட்டோ ஹெரே கூறினார்.
பெரும்பாலான கத்தோலிக்க தேசத்தின் மிக முக்கியமான விடுமுறை நாட்களில் வெப்பமண்டல புயல் எதுவும் இல்லை. ஆனால், சூடான மற்றும் குளிர்ந்த காற்று சந்திக்கும் பகுதியால், தெற்கு பிலிப்பைன்ஸில் மழை மேகங்கள் உருவாக காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.
கிளாரின் நகர மேயர் எமெட்ரியோ ரோவா கூறுகையில் ஆடு, மாடு, பன்றிகள், கோழி ஆகியவை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது என குறிப்பிட்டார்.