மேலும் அறிய
Pak Social Media Ban: பாகிஸ்தானில் X-க்கு தடை! எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
Pakistan Social Media Ban: X தளத்தின் மீதான தடையை ஒரு வாரத்தில் நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

X தளத்தின் மீதான தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு; image credits: @pixabay
பாகிஸ்தானில் உள்ள X தளத்தின் ( முன்பு Twitter ) பயனர்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தளத்தை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
X தளம் முடக்கம்:
கடந்த பிப்ரவரி மாதம், பொதுத் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி, சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியானது, நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் X தளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தற்போது X தளம் முடக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போது, இன்று புதன்கிழமையன்று எழுத்துப்பூர்வமாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, ஆம் X தளத்தை முடக்கினோம். பாதுகாப்பு காரணங்களுக்காக முடக்கினோம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தெரிவித்துள்ளதாவது "முக்கியமான பிரச்னைகளை தீர்ப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க சமூக ஊடக நிறுவனமான X தயக்கம் காட்டியதாகவும் அமைச்சகம் குற்றம் சாட்டியது.
அப்போது இம்ரான் கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஒடுக்கத்தான் தடை செய்யப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
நீதிமன்றம் உத்தரவு:
இதையடுத்து தளம் முடக்கப்பட்டது இரண்டு மாதங்களுக்கும் மேலாக, நீடித்த நிலையில், ஒரு வாரத்திற்குள் X தளத்தின் மீதான தடையை நீக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Pakistan's Geo News reports, "The Sindh High Court (SHC) Wednesday directed the Ministry of Interior to revoke its letter regarding suspension of social media platform X, formerly Twitter, within one week. The SHC chief justice's remarks come as X, which is used by millions of…
— ANI (@ANI) April 17, 2024
மேலும், ஒரு வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement