இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
அமெரிக்காவிற்காகவும் பிரிட்டனுக்காகவும் கடந்த 30 வருடங்களாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார்.

அமெரிக்காவிற்காகவும் பிரிட்டனுக்காகவும் கடந்த 30 வருடங்களாக தீவிரவாதிகளுக்கு உதவுகிறோம் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளார்.
மேற்கு நாடுகளுக்காகவே பாகிஸ்தான் இந்த மோசமான வேலையை செய்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு அளித்த மோசமான செயல்தான் தற்போது பாகிஸ்தானை மோசமான நிலைக்கு ஆளாகியுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிக்கிறதா பாகிஸ்தான் என்ற கேள்விக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார். ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பயங்கரவாத அமைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
கடந்த 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர். இதுகுறித்த வீடியோவும் வெளியாகி இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் 26 பேர் கொலை செய்துள்ளனர்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த பதிலை கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கை நியூஸுடன் உரையாடுவதைக் காட்டும் ஒரு வைரல் வீடியோ கிளிப்பில், ஆசிஃப், "நாங்கள் சுமார் 3 தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்கும் இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறோம்" என்று கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "அது ஒரு தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம். அதனால்தான் நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள்" எனத் தெரிவித்தார்.





















