Operation Sindoor: டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
Operation Sindoor Weapons: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், தாக்குதலுக்கு, மிகவும் அதிநவீன ஏவுகணைகள், ஆயுதங்களை இந்தியா பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது, இன்று அதிகாலை வேளையில் இந்தியா தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியுதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னென்ன ஏவுகணைகள் என்று பார்க்கலாம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல்
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய 9 தளங்களில், ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட எல்லை தாண்டிய தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளது இந்திய ராணுவம்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இடம் என்று கருதப்படும் பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரண்டு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் 25 முதல் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரிட்கேவில், இலக்காக இருந்த மஸ்ஜித் வா மர்காஸ் தைபா, எல்.இ.டி.யின் முக்கிய தலைமையகம் ஆகும். இது நீண்ட காலமாக பாகிஸ்தானின் "பயங்கரவாத இடம்" என்று கருதப்படுகிறது.
இலக்கு வைக்கப்பட்ட மற்ற இடங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை புலனாய்வு அமைப்புகள் சரிபார்த்து வருகின்றன. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, மொத்தம் 80 முதல் 90 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில், JeM மற்றும் LeT ஆல் இயக்கப்படும் ஏவுதளங்கள், பயிற்சி முகாம்கள் மற்றும் தீவிரமயமாக்கல் மையங்கள் ஆகியவை அடங்கும். இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளின் கீழ் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு இந்தியா பயன்படுத்திய அதிநவீன ஏவுகணைகள்
பாகிஸ்தான் பயங்கரவாத தளங்களில் தாக்குதல் நடத்த, இந்தியா அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்திவரும் இந்திய ராணுவம், அதற்காக அதிக துல்லியமான ஆயுதங்களின் தொகுப்பை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. தரைவழி, வான்வழி, கடல்வழி என முப்படைகளையும் பயன்படுத்தி, இந்தியா தனது ராணுவ பலத்தை பறைசாற்றியுள்ளது.
SCALP ஏவுகணை
இந்தியாவின் இந்த தாக்குதலில் முக்கியமான ஒரு ஏவுகணையாக கருதப்படுவது, புயலின் நிழல் என அழைக்கப்படும் ஸ்கால்ப் ஏவுகணை. 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமான தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை, கப்பலிலில் இருந்து விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணையாகும். இதில் இன்னொரு சிறப்பம்சம், இந்திய விமானத்தை ஆபத்தில் ஆழ்த்தாக வகையில் இதன் செயல்பாடு இருப்பதுதான்.
HAMMER BOMB
இந்தியா நடத்தும் தாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு ஆயுதமாக, ஹேமர் வெடிகுண்டு உள்ளது. பிரான்ஸிலிருந்து தயாராகும் இந்த வெடிகுண்டு, 50 முதல் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பதுங்கு குழிகள், கட்டிடங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
KAMIKAZE DRONES
நிகழ்நேர கண்காணிப்பிற்கும், எதிரிகளின் இலக்குகளை உறுதிப்படுத்தி தாக்குவதற்கும் கமிகேஸ் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ட்ரோன் வெடிகுண்டு அமைப்புகள், எதிரி மண்டலங்களின் மீது வட்டமிட்டு, அச்சுறுத்தல்கள் உறுதி செய்யப்பட்ட துல்லியமான தருணத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





















