Counter-Strike 2: வீடியோ கேம் பிளேயர்களா நீங்கள்? கோடையில் வெளியாகும் கவுண்டர் ஸ்ட்ரைக் 2.. புதிய அம்சங்கள் என்ன? முழு விவரம் இதோ.
வால்வ் நிறுவனம் புதிய மோனிகர் கவுண்டர் ஸ்ட்ரைக் 2 உடன், Source 2 இன்ஜினுக்கான CS:GO இன் மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வால்வ் நிறுவனம் புதிய மோனிகர் கவுண்டர் ஸ்ட்ரைக் 2 உடன், Source 2 இன்ஜினுக்கான CS:GO இன் மாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு டிவிட்டரில் வெளியாகியுள்ளது.
Today we're excited to announce Counter-Strike 2. Counter-Strike 2 is an overhaul to every system, every piece of content, and every part of the C-S experience. First, let's talk about smoke grenades: pic.twitter.com/iTtguRHJ0S
— CS2 (@CounterStrike) March 22, 2023
இந்த வாரம் கவுண்டர் ஸ்ட்ரைக் 2 இன் வெளியீட்டு செய்தியை அறிவித்த, வால்வ் நிறுவனம் இதன் அனுபவம் எப்படி இருக்கும் அடுத்தக்கட்டம் என்ன என்பதை தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் புதிதாக மறுபெயரிடப்பட்ட @CounterStrike ட்விட்டர் கணக்கிற்கு, கவுண்டர் ஸ்ட்ரைக் 2 ஐ அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், கவுண்டர் ஸ்ட்ரைக் 2 "இந்த கேமின் ஒவ்வொரு அமைப்பும், ஒவ்வொரு கனினிக்கு ஏற்றவாறு C-S இன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு புதிய அனுபவம் கொடுக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், கவுண்டர் ஸ்ட்ரைக் 2 கேம் 2023 கோடையில் வெளியாகும் என்பதையும், இது CS:GO க்கு இலவசமாக மேம்படுத்தப்படும் என்பதையும் அறிவித்தது.
ஏற்கனவே இந்த கேம் முதலில் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து தற்போது கோடையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வால்வ் கவுண்டர் ஸ்ட்ரைக் இணையதளத்திற்குச் சென்று கேமிற்கான வரையறுக்கப்பட்ட சோதனையை (test game) தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான CS:GO பிளேயர்களுக்கு உள்ளது என்று அறிவித்துள்ளது. ஒருசில காரணிகளின் அடிப்படையில் பிளேயர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளது. CS:GO வில், கேம்களின் முதன்மை மெனுவில் அறிவிப்பைச் சரிபார்த்து, Counter Strike 2க்கான வரையறுக்கப்பட்ட சோதனையில் சேர நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கலாம் என அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 கோடையில் முழு அளவிலான கேம் அறிமுகத்திற்கு முன்னதாக, வரையறுக்கப்பட்ட சோதனையில் அதிக பிளேயர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பதை வால்வ் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புடன் வால்வ் Counter Strike 2 அனுபவத்தின் ஒரு பகுதியாக வரும் சில அம்சங்களை எடுத்துக்காட்ட தொடர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. முதலில், விளையாட்டு வரைபடங்களுக்கான மேம்படுத்தல்கள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டது. வரைபட மாற்றங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லைட்டிங் மற்றும் பிரதிபலிப்புகளை தத்ரூபமாக உருவாக்க புதிய லைட்டிங் மற்றும் ரெண்டரிங் அமைப்புகளைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, புதிய கேமை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்காக வரைபடத்தை முழுமையாக மறுகட்டமைக்கும் மாற்றங்கள் உள்ளன. இந்த கேம் CS:GO க்கு மேம்படுத்தப்பட்டதன் மூலம் வால்வ் மக்களை ஈர்க்க அனைத்தையும் சரியாக செய்வதாக தெரியவந்துள்ளது, அதே சமயம் கவுண்டர் ஸ்ட்ரைக் முதலாம் பாகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தாமல் இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளது. இது வீடியோ கேம் பிரியர்களை மீண்டும் இந்த கேமை ஆர்வத்துடன் விளையாட வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்தை பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது.