முடி நரைத்ததால் மூத்த செய்தி தொகுப்பாளர் பணி நீக்கம்...சர்ச்சையில் சிக்கிய செய்தி நிறுவனம்
சிடிவி செய்தி தொகுப்பாளராக இருந்த லிசா லாஃப்லேம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகின்றன.
"உங்கள் முடியில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், மற்ற அனைவரும் கவனம் செலுத்துவார்கள்" என அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.
நீண்டகாலமாக சிடிவி செய்தி தொகுப்பாளராக இருந்த லிசா லாஃப்லேம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகின்றன. அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
I have some news... pic.twitter.com/lTe3Rs0kOA
— Lisa LaFlamme (@LisaLaFlamme_) August 15, 2022
ஆனால், லாஃப்லேம் வெளியேறிய பிறகு, அவரது தலைமுடி நரைத்தது குறித்து செய்தி நிறுவனத்தின் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. லாஃப்லேமின் பணிநீக்கம் மற்றும் செய்தி நிறுவன நிர்வாகிகள் அவரது தலைமுடி குறித்து விமர்சித்தது பலரை கோபப்படுத்தியுள்ளன. 70க்கும் மேற்பட்ட முக்கிய கனடிய ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் லாஃப்லேமின் பணிநீக்கத்தைக் கண்டித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
LinkedInஇல், பேல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மிர்கோ பிபிக் இதுகுறித்து கூறுகையில், "லிசாவின் வயது, பாலினம் அல்லது நரை முடி ஆகியவை காரணமாக அவர் நீக்கப்பட்டதாக வெளியே சொல்லப்படுகிறது. ஆனால், அப்படி இல்லை என்பதை சொல்வதில் நான் திருப்தி அடைகிறேன்" என்றார்.
.@nytimes coverage of @LisaLaFlamme_ story. Bell may have thought of Lisa LaFlamme as a cost-an expense. Seems others think of her as a treasured asset. The New York Times writes "Ms. LaFlamme was at the top of her profession" https://t.co/TwrZy7dWKg
— Charles Adler (@charlesadler) August 30, 2022
லாஃப்லேம் பணிநீக்கம் செய்யப்பட்டதில் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், பெல் மீடியாவின் துணைத் தலைவர் மைக்கேல் மெல்லிங், விடுப்பில் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. லாஃப்லேம் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், பல பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வயது பிரச்னை மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
வயது முதிர்வு, அனைவரையும் பாதித்தாலும், பெண்கள் மிகப் பெரிய பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள். நுகர்வோர் கலாச்சாரத்தில் கவர்ச்சிக்கான தரநிலைகள் இளமைப் பண்புகளால் வரையறுக்கப்படுகின்றன. அதை ஊடகங்கள் மூலம் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன.
உடல் தோற்றத்தின் அடிப்படையில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகிறார்கள் என்பதற்கு பல வேறுபாடுகள் உள்ளன.