மேலும் அறிய

New Year 2023 LIVE: புத்தாண்டு பிறந்தது.. 2023ம் ஆண்டை ஆடிப்பாடி வரவேற்ற மக்கள்...!

New Year 2023 LIVE Updates: உலகம் முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபி நாடுடன் இணைந்து இருங்கள்.

Key Events
New Year 2023 LIVE Updates welcome 2023 new year wishes from various country leaders new year celebrations New Year 2023 LIVE: புத்தாண்டு பிறந்தது.. 2023ம் ஆண்டை ஆடிப்பாடி வரவேற்ற மக்கள்...!
புத்தாண்டுக் கொண்டாட்டம்

Background

ஆங்கில புத்தாண்டையொட்டி நட்சத்திர விடுதிகளுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. 

விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:

  • நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டையொட்டி 80% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.
  • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.
  • நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது.
  • அதிகமான போதையில் இருக்கும் நபர்கள் நட்சத்திர விடுதிகளில் அனுமதிக்கப்படக்கூடாது. 
  • நட்சத்திர விடுதிகளின் கொண்டாட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
  • நட்சத்திர விடுதிகளில் போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
  • சென்னை மக்களுக்கு விழிப்புணர்வு குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.
  • நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. 
  • மது விருந்து நடைபெறும் இடத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி கூடாது. 
  • 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
  • 31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு வாகனச் பணியில் ஈடுபடுவார்கள். சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
  • முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது. மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
  • அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்.
  • மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
  • வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
  • கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
  • கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் இரகசியம் காக்கப்படும்.
  • கட்டணமில்லா தகவல் தரும்அவசர உதவி தேவைப்படுபவர்கள் 'காவல் உதவி' என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கு 'காவல் உதவி' செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையில் ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் விளக்கமளித்தார். அதில், மதுபோதையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்கக்கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மெரினா காமராஜர் சாலையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதியில்லை. புத்தாண்டு அன்று சென்னையில் 368 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படும். சோதனைச்சாவடிகள் மட்டுமின்றி ரோந்து வாகனம் மூலமும் பைக் ரேஸ் தடுக்கப்படும்.பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 368 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதைப்பொருள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ” என தெரிவித்தார். 

23:44 PM (IST)  •  31 Dec 2022

இன்னும் சில நிமிடங்களில் புத்தாண்டு... உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் மக்கள்..!

இன்னும் சற்று நேரத்தில் புத்தாண்டு பிறக்க உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஆர்வத்துடன் காத்துள்ளனர். 

23:20 PM (IST)  •  31 Dec 2022

இன்னும் சற்று நேரத்தில் புத்தாண்டு.. பட்டாசுகளை கொளுத்தும் மக்கள்....!

2023ம் ஆண்டை வரவேற்கும் விதமாக பல பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்து இளைஞர்களும், சிறுவர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
iPhone 200mp Camera: DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
DSLR-களை ஓரங்கட்ட வரும் ஆப்பிள் ஐபோன்; ஆத்தாடி.! 200 MP கேமராவா.? சம்பவம் எப்போ தெரியுமா.?
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னைல ஜனவரி 9-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.? விவரம் இதோ
Embed widget