Aung San Suu Kyi Jailed: மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூ கி க்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! காரணம் என்ன?
இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும், ஆங் சான் சூகியின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர் ஆதரவாளர்கள்.
மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூ கி க்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகிக்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
#UPDATE Myanmar court jails ousted civilian leader Aung San Suu Kyi for four years for inciting dissent against the military and breaching Covid rules, junta spokesman tells @AFP.
— AFP News Agency (@AFP) December 6, 2021
The Nobel laureate has been detained since the generals ousted her government on February 1 pic.twitter.com/ZyROaiLoQY
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறும்போது, இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும், ராணுவம் அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளையில் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் அவரது அரசாங்கத்தை அகற்றியதில் இருந்து நோபல் பரிசு பெற்றவர் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க: Watch Video: நம்ம ஊரு பஸ் ஸ்டாண்ட் தோத்திடும்... அமெரிக்க விமான நிலையத்தில் அடித்து உருண்ட பயணிகள்!
உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தை மீறுதல், ஊழல் மற்றும் தேர்தல் மோசடி உள்ளிட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் ஆங்சாங் சூ கி மீதுள்ளது. மேலும் அவர் அனைத்து விஷயங்களிலும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பல ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இதே குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி வின் மைன்ட்டும் நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவம் கையகப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, அவரது தேசிய ஜனநாயகக் கட்சி வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக ஆங்சாங் சூ கிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க: Omicron Virus: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படுமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்