மேலும் அறிய

உக்கிரமடையும் போராட்டம்! தண்ணீர் தொட்டி மேல் மண்ணெண்ணெய் கேன்களுடன் மக்கள் - மதுரையில் நடப்பது என்ன?

மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் மிகவும் முக்கியமான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது. சர்வதேச விமான நிலையமாக செயல்படும் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் கேன்களுடன் போராட்டம்:

இதற்கு அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாற்று இடம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் கூறியிருந்த நிலையில், மாற்று இடம் இதுவரை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. மாற்று இடம் தராமலே அப்பகுதி மக்களை காலி செய்ய காவல்துறையினரும், அதிகாரிகளும் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் காலை முதல் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் என அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் மண்ணெண்ணெய் கேன்களுடன் அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலைய விரிவாக்கம்:

இதுவரை 146 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் மாற்று இடம் வழங்காமல் அரசு தங்களை மாறக்கூறுவது ஏற்புடையதல்ல என்று பொதுமக்கள் அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் தண்ணீர், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் மேலும் பல நாடுகளுக்கு மதுரையில் இருந்து நேரடியாக விமானங்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக அரசு விமான நிலையத்தை விரிவாக்க திட்டமிட்டது. இதையடுத்து, விமான நிலைய விரிவாக்க பணிக்காக சின்ன உடைப்பு  கிராம நிலத்தை அரசு கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்காக நிலத்தை கையகப்படுத்த கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது பட்டாக்களையும் அரசு பெற்றுள்ளது.  அதற்கான இழப்பீடும் வழங்கியுள்ளது.

தற்காலிக வாபஸ்:

அதேசமயம் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையுடன் மாற்று இடம், அரசு வேலை வழங்கக்கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதே அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு ஆகும். திடீரென அரசு அதிகாரிகள் இன்று வீடுகளை காலி செய்ய வலியுறுத்தியதும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உரிய கால அவகாசமும், மாற்று இடமும் வழங்கக்கோரி இன்று காலை முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, அப்பகுதி மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget