மேலும் அறிய
Advertisement
பணம் அச்சிடும் செயல்பாடு நிறுத்தப்படும்.. அறிவித்த பிரதமர்.. என்ன நிலவரம் இலங்கையில்?
அதிகரித்து வரும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பணம் அச்சிடும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் நிறுத்தப்படும் என அவர் அறிவித்திருக்கிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி பிரச்சனையை தீர்ப்பதற்காக பணம் அச்சிடும் நடவடிக்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் திடீரென அடுத்த வருட முற்பகுதியில் பணம் அச்சிடும் நடவடிக்கை நிறுத்தப்படும் என அறிவித்திருக்கிறார் .மேலும் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி என்பது சரி செய்யப்படுமா? மக்களுக்கான வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடியை சரிசய்ய இந்தியா ,சீனா ,ரஷ்யா, அமெரிக்கா ,மலேசியா ,ஜப்பான் என உலக நாடுகள் உதவிகளை செய்து வருகின்றன. தொடர்ந்து உதவிகளை வழங்கினாலும் அது தற்காலிகமானதே ஆகும் . நாட்டின் பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்.
க்ஆகவே இந்த பொருளாதார பிரச்சினையை அடுத்த வருட முற்பகுதியில் தீர்ப்பதற்கு இலங்கை பிரதமர் முயற்சிப்பதாக அவரது அறிவிப்பின் மூலம் அறிய முடிகிறது. இதனை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத கால பகுதி இலங்கைக்கு முக்கியமான ஒரு காலகட்டமாக பார்க்கப்படுகிறது . பிரதமரின் அறிவிப்பின்படி குறித்த ஆறு மாத காலத்திற்குள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டால் பிரதமர் ரணில் நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் ஆவார் என தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆறு மாத கால பகுதிக்குள் இலங்கையின் அரசியல் தலைவர்கள் வேகமாக செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்னும் ஒன்றரை வருடங்களாவது தேவை நாட்டின் பிரச்சனையை தீர்ப்பதற்கு என அறிவித்திருந்தார் . இந்நிலையில் திடீரென அடுத்த வருட முற்பகுதியில் பணம் அடிப்பதை நிறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார் . இந்த தகவலை அவர் எந்த நோக்கத்தில் வெளியிட்டார் என்று தெரியவில்லை. இந்த ஆறு மாத காலத்திற்குள் இலங்கையின் வருமானத்தை, உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மக்களின் வாழ்வாதார பிரச்சனையை ஓரளவாவது சரி செய்ய முடியும். ஆனால் இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் முற்றும் முழுதுமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஆகவே இலங்கையை மீள கட்டியெழுப்ப வேண்டியவர்கள் அங்குள்ள அரசியல் தலைவர்கள்தான் .
தற்போது நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஒழுங்கு முறையான திட்டங்களை வகுத்து உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து அதற்குத் தேவையான உதவிகளை செய்தால் மட்டுமே மக்கள் ஓரளவாவது இந்தப் பிரச்சனையில் இருந்து வெளியே வருவார்கள். இல்லை இந்த பொருளாதாரப் பிரச்னை தொடர்ந்து நீடிக்கும் ஆனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராடக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
தற்போது கொழும்பில் மட்டுமே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவை நாடு முழுவதும் பரந்த அளவில் ஏற்படக்கூடிய நிர்ப்பந்தத்தை தற்போது இருக்கும் அரசு ஏற்படுத்தி விடக்கூடாது . ஆகவே மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் ,மக்களுக்கான தேவைகளை அறிந்து உதவி செய்வதற்கான சிறந்த தருணம் இது. இலங்கையை பொறுத்தவரை மக்களால் தேர்வு செய்யப்படுவோர் தான் அங்கு ஆட்சி அமைக்கிறார்கள். அதிபர் முதல் அமைச்சர்கள் வரை மக்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆகவே அடுத்த வரும் தேர்தலில் ஆட்சி அமைக்க விரும்பும் அரசியல் கட்சிகள் ,நான் நீ என்று போட்டி போடாமல் ,களத்தில் இறங்கி மக்களுக்கான தேவைகளை அறிந்து நிறைவேற்றும் பட்சத்தில் நிச்சயமாக வரும் தேர்தலில் புதிய தலைமையை எதிர்பார்க்கலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion