முடி எங்கடா... அது ஓல்டு மாடல்... அதுக்கு பதிலா செயின் நட்டாச்சு! - ராப் பாடகரின் வைரல் சம்பவம்!
மெக்சிகோ ராப் பாடகர் ஒருவர் தன்னுடைய தலையில் தங்க சங்கிலிகளை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ராப் இசை பாடகர்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு அடையாளத்தை வைத்து கொள்வது வழக்கம். குறிப்பாக அவர்கள் உடை அணிவது சற்று வித்தியாசமாக இருக்கும். ஒரு சில டாட்டூ போட்டு கொண்டு இருப்பார்கள். மற்றவர்கள் பெரிய சங்கிலிகளை கழுத்தில் போட்டு கொண்டு தொப்பியுடன் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களில் இருந்து சற்று மாறுபட்டு இருக்க ஒரு பிரபல ராப் பாடகர் புதிய முயற்சியை எடுத்துள்ளார். யார் அவர்? அவர் எடுத்த முயற்சி என்ன?
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ராப் இசை பாடகர் தன் சூர். இவர் சமீப காலங்களாக அங்கு ராப் பாடல்கள் ஆல்பத்தை வெளியிட்டு மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார். இந்தச் சூழலில் அவர் தனக்கு என்று ஒரு புதிய அடையாளத்தை தன்னுடைய பாடல்களுடன் தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் அவர் ஒரு முடிவை எடுத்துள்ளார். மற்ற இசை கலைஞர்கள் தங்களுடைய முடியில் டை அல்லது கலர் பூசி கொண்டு வருகின்றனர். எனவே அவர்களில் இருந்து அவர் மாறுபட்டு இருக்க இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இவர் தன்னுடைய தலையில் தங்க சங்கிலிகளை வைத்து முடி போல் தொங்க வைத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து தன் சூர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த செயல் தொடர்பாக ஒரு பதிவை மேற்கொண்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தங்க சங்கிலிகளை தன்னுடைய தலையில் தொங்க வைத்து இருப்பது போல் படங்கள் அமைந்துள்ளன. இந்தப் படத்தை பலரும் பார்த்து ஆச்சரியத்தில் வியந்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைக்கு அவர் எவ்வளவு செலவு செய்தார் என்று தெரியவில்லை. மேலும் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து நம்முடைய தலைக்கு மிகவும் பெரிய ஆபத்தை உருவாக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதை பொருட்படுத்தாமல் 23 வயதான தன் சூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெக்சிகன் மொழியில் ஒரு பதிவை செய்துள்ளார். அவருடைய பதிவை பார்த்து பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: எந்நேரமும் காம சிந்தனை... 20 ஆண்டில் 34 பாலியல் குற்றம் செய்த காம கொடூரன் ரொனால்டு ஜெரேமி!