Melissa Cyclone: ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா புயல்.. மோன்தாவை விட பயங்கரம்.. புயலுக்குள் புகுந்த விமானம்
Melissa Cyclone:ஜமைக்காவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள நியூ ஹோப் அருகே மெலிசா சூறாவளி 5வது வகை புயலாக கரையைக் கடந்தது,

Melissa Cyclone: மெலிசா சூறாவளி, ஜமைக்காவின் நியூ ஹோப்பில், சக்திவாய்ந்த வகை 5 புயலாக கரையைக் கடந்தது.
மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்று மற்றும் பலத்த மழையுடன் தாக்கியது.
மெலிசா புயல்:
174 ஆண்டுகளில் இல்லாத ஜமைக்காவில் 5வது வகை புயலான மெலிசா புயல் கரையைக் கடந்தது, இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக 185 மைல் (295 கிமீ/மணி) வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அப்பகுதி முழுவதும் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
சேதம் குறித்த தகவல்:
இந்த சூறாவளியின் சேதம் குறித்துப் அந்த நாட்டு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் தெரிவிக்கையில் "இதுவரை எங்களுக்குக் கிடைத்த அறிக்கைகளில் மருத்துவமனைகளுக்கு சேதம், குடியிருப்பு சொத்துக்கள், வீட்டுவசதி மற்றும் வணிக சொத்துக்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பாக தென்மேற்குப் பகுதிகளில், செயிண்ட் எலிசபெத்தில் அதிக சேதம் ஏற்ப்பட்டதாக தெரிவித்தார். ஜமைக்காவில் சுமார் 25,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அங்கு அதிகப்படியான சேதம் என்றும், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது" என்று பேரிடர் தயார்நிலை மற்றும் அவசரநிலை மேலாண்மை அலுவலகத்தின் (ODPEM) இயக்குநர் ஜெனரல் ரிச்சர்ட் தாம்சன் தெரிவித்தார்.
இறப்பு எண்ணிக்கை:
இந்த புயலுக்கு இது வரை 7 பேர் உயிரிழந்தாக தெரிகிறது, ஜமைக்காவில் மூன்று, ஹைட்டியில் மூன்று மற்றும் டொமினிகன் குடியரசில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கியூபாவை நோக்கி நகர்கிறது:
அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின் (NHC) சமீபத்திய தகவல்படி, மெலிசா 125 mph (200 km/h) வேகத்தில் காற்று வீசும் வகை 3 சூறாவளியாக பலவீனமடைந்துள்ளது.இந்த சூறாவளி இப்போது ஜமைக்காவிலிருந்து விலகி கிழக்கு கியூபாவை நோக்கி நகர்கிறது.
குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 160 மைல் தொலைவில் அமைந்துள்ளது, மணிக்கு 8 மைல் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்கிறது.
கியூபா மற்றும் பஹாமாஸ் வழியாக புயல் நகரும்போது அது ஒரு பெரிய சூறாவளியாக (வகை 3 அல்லது அதற்கு மேற்பட்டது) இருக்கும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி கணித்துள்ளது.
மெலிசா புயல் கிழக்கு கியூபாவில் 10 முதல் 20 அங்குல மழை பெய்யும் என்றும், மலைகளில் 25 அங்குல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புயலை படம் பிடித்த விமானம்:
புயல் எச்சரிக்கை மையத்திற்குத் தகவல்களை சேகரிப்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழுவான "சூறாவளி வேட்டைக்காரர்கள்",மெலிசா' புயலின் கண் பகுதிக்குள் பறந்து சென்று படம் பிடித்துள்ளனர்.
A thread of videos from today’s flight into Hurricane Melissa
— Tropical Cowboy of Danger (@FlynonymousWX) October 27, 2025
In this first one we are entering from the southeast just after sunrise and the bright arc on the far northwest eye wall is the light just beginning to make it over the top from behind us. pic.twitter.com/qGdpp7lbCN






















