மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Poll of Polls)

Trump Gaza: ”ஐ வாண்ட் பீஸ், மிஸ் ஆனா ரத்தக்களறி தான் வரும்” ஹமாஸ், இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப் - இன்று தீர்வு?

Trump Gaza: அமைதி ஏற்பட முன்வராவிட்டால் பெரும் ரத்தக்களறி ஏற்படும் என, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

Trump Gaza: காஸா அமைதி ஒப்பந்தத்தை நோக்கி வேகமாக நகருங்கள் என, இஸ்ரேல் மற்றும் ஹமாஸிற்கு ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல், ஹமாஸிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காஸா அமைதி ஒப்பந்தத்தை நோக்கி வேகமாக நகர வேண்டும் எனவும், அதில் தோல்வியுற்றால் பெரும் ரத்தக்களறி ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இருதரப்பினர் இடையே எகிப்தில் இன்று போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ட்ரம்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பான சமூக வலைதள பதிவில், “அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இந்த வாரத்திற்குள் முற்றுப்பெற வேண்டும். அனைவருமே வேகமான முன்னேற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நூற்றாண்டின் மிகவும் பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிக்கிறேன். காலம் என்பது மிகவும் முக்கியமானது இதனை தவறவிட்டால் பெரும் ரத்தக்களறி ஏற்படக்கூடும். அதனை யாருமே பார்க்க விரும்பவில்லை” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

நேர்மறையான விவாதம்

காஸா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் மற்றும் மற்ற நாடுகளிடையே, நேர்மறையான விவாதம் நடைபெற்று வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான தனது பதிவில், “ஹமாஸ் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பிற நாடுகளிடம் இந்த வாரம் நேர்மறையான விவாதம் இருந்தது. பணயக் கைதிகளை விடுவிப்பது, காஸா போரை நிறுத்துவது, இறுதியாக மற்றும் மிகவும் முக்கியமாக மத்திய கிழக்கு பகுதியில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்தது, வேகமாகவும் முன்னேறியது. தொழில்நுட்ப குழுவினர் திங்கட்கிழமை அன்று எகிப்தில் கூடி இறுதி முடிவுகளை எடுக்கும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

இன்று தீர்வு கிடைக்குமா?

20 அம்சங்களை உள்ளடக்கிய காஸா அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்தார். அதனை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் குழு ஏற்றுக்கொள்ளாவிட்டால், நரகத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எச்சரித்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு, காஸா அமைதித் திட்டத்தின் சில பகுதிகளை ஹமாஸ் குழு ஏற்றுக்கொண்டது. அதில், ”போரை முடிவுக்குக் கொண்டுவருதல், இஸ்ரேல் காசாவில் இருந்து பின் வாங்குதல், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தல், உதவி மற்றும் மீட்பு முயற்சிகள் மற்றும் பாலஸ்தீன மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு” ஆகியவை அடங்கும். 

அதன்படி, ஹமாஸ் குழுவினர் விரைந்து செயல்பட்டு இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளுமாறும்m, தவறினால் காஸாவில் மேலும் பேரழிவை ஏற்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அதோடு, காஸாவில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அறிவுறுத்தினார். ஆனால், அந்த எச்சரிக்கைக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காஸாவில் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின் மூலம், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்படி நடந்தால், முதற்கட்டமாக இருதரப்பிலும் உள்ள பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆற்றில் குதிக்க ஓடிய திருநங்கை! காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்! போராட்டத்தின் பின்னணி?
அரியணை ஏறும் பாஜக? ஷாக்கில் தேஜஸ்வி, ராகுல் வெளியான EXIT POLL | Bihar Exit Poll 2025
குடும்பத்தை பிரித்த ஆதவ் தூக்கி எறிந்த திமுக, விசிக விஜய்யை எச்சரிக்கும் சார்லஸ் | Charles Martin on Aadhav Arjuna
வெடித்து சிதறிய சிலிண்டர்கள் தீக்கிரையான டிப்பர் லாரி பரபரக்கும் அரியலூர் பகீர் வீடியோ | Ariyalur Gas Cylinder Lorry Blast
Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
UPSC Mains 2025 Result: தலைநிமிரும் தமிழ்நாடு; யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் உயர்ந்த தேர்ச்சி- எத்தனை பேர் தெரியுமா?
Modi TN Visit : ‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
‘ஆபரேஷன் TN’ கோவைக்கு வரும் பிரதமர் மோடி ; சந்திக்கப்போவது யாரை..?
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Trump H1B Visa: ”அமெரிக்காட்ட அவ்ளோ திறமை இல்லப்பா” H1B விசா.. உண்மையை போட்டுடைத்த ட்ரம்ப்
Ramadoss PMK: முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
முடக்கப்படுமா மாம்பழம் சின்னம்.? ராமதாஸ் எடுத்த முடிவால் அலறும் பாமக நிர்வாகிகள்
TVK VIJAY: ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருக்கு- விஜய்
ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருக்கு- விஜய்
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
UPSC Exam Results: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 2736 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?
மருத்துவமனைகளில் 12,000 மருத்துவர் இடங்கள் காலி: உயிர்காக்கும் துறையை சாகடிப்பதா? அன்புமணி கேள்வி
மருத்துவமனைகளில் 12,000 மருத்துவர் இடங்கள் காலி: உயிர்காக்கும் துறையை சாகடிப்பதா? அன்புமணி கேள்வி
Embed widget