அதிக கலோரிகளை குறைக்கும் சதுரங்க தண்டாசனம்!
யோகா விரிப்பில் குப்புறப்படுத்து, கைகளை மார்புக்கு பக்கவாட்டில் கை, வைத்து உடலின் மேல் பகுதியை மட்டும் மட்டு உயர்த்தவும்.
இப்போது முழங் காலை தரையில் பதித்து, அழுத்தம் கொடுத்தவாறு இடுப்புப் பகுதியை தோள்பட்டைக்கு நேர்க்கோட்டில் இருக்கும் படி உயர்த்தவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்து, பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
யோகா விரிப்பில் குப்புறப்படுத்து, கைகளை மார்புக்கு பக்கவாட்டில் வைத்து, கால் விரல்களில் அழுத்தம் கொடுத்தவாறு முழு உடலையும் ஒரே நேர்க் கோட்டில் இருக்கும்படி உயர்த்தவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்து, பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
யோகா விரிப்பில் குப்புறப்படுத்து, கைகளை மார்புக்கு பக்கவாட்டில் வைத்து உடலின் மேல் பகுதியை மட்டும் உயர்த்தவும். பின்னர் கால் விரல்களில் அழுத்தம் கொடுத்து உடலின் கீழ்ப்பகுதியை உயர்த் தவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்து, பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
யோகா விரிப்பில் குப்புறப்படுத்து, கைகளை மார்புக்கு பக்கவாட்டில் வைத்து தாடை, தோள்பட்டை மற்றும் முழங்காலை தரையில் படும்படி வைக்கவும். இப்போது, முழங்கால் மற்றும் மணிக்கட்டில் அழுத்தம் கொடுத்து, இடுப்புப் பகுதியை மட்டும் மேலே உயர்த்தவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்து, பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
யோகா விரிப்பில் குப்புறப்படுத்து, கைகளை வைக்கவும். பின்பு கைகளை மார்புக்கு பக்கவாட்டில் முழுவதுமாக உயர்த்தியபடி, உப உடலின் மேல் பகுதியை உயர்த்தவும். பின்னர் கால் விரல்களில் அழுத்தம் கொடுத்து உடலின் கீழ்ப்பகுதியை உயர்த்தவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருந்து, பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரவும்.
முதுகுத் தசைகளை உறுதியாக்கி, வலிகளை நீக்கி, முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்யும். தோள், கை மணிக்கட்டு, எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்தும்.
கழுத்து மற்றும் வயிற்று தசைகளை உறுதியாக்கும். உடலின் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவும். உடலை சமநிலைப்படுத்தி, மனஅழுத்தத்தைக் குறைக்கும்.