பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை நுழைத்த சிறுவன்! சிக்கிக்கொண்டதால் அறுவைசிகிச்சை!
லண்டனில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது ஆணுறுப்பின் நீளத்தை அறிந்துகொள்ள தனது பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை உள்ளே நுழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை நுழைத்த சிறுவன்! சிக்கிக்கொண்டதால் அறுவைசிகிச்சை! london: 15-Year-Old Boy Gets USB Cable Stuck in His Genitals Trying to Measure பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை நுழைத்த சிறுவன்! சிக்கிக்கொண்டதால் அறுவைசிகிச்சை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/060b96895f3e64046978cd139ac2b7ac1662704877963175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லண்டனில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது ஆணுறுப்பின் நீளத்தை அறிந்துகொள்ள தனது பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை உள்ளே நுழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது ஆணுறுப்பின் நீளத்தை தெரிந்துகொள்ள ஒரு விபரீத்தில் இறங்கினார். அதன்படி, தனது பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை உள்ளே நுழைத்துள்ளார். அப்போது சிறிது சிறிதாக உள்ளே சென்றே அந்த கேபிள் அப்படியே நின்றுள்ளது. அவரால் அதை அகற்ற முடியவில்லை.
தொடர்ந்து, உள்ளே சென்ற கேபிள் தானால சிக்கி முடிச்சு விழுக, ஒரு கட்டத்தில் சிறுவனின் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறத் தொடங்கியது. இதனால் பயந்துபோன சிறுவன் தனது தாயாரிடம் ஓடிபோய் தகவலை தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர்கள் சிறுவனிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, அதற்கு அவர் தனது ஆண்குறியை அளவிட முயற்சித்ததாகவும், ரூலருக்கு பதிலாக யூ.எஸ்.பி கேபிளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சிறுவனின் உடலை பரிசோதனை மேற்கொண்டதில் பிறப்புறுப்புக்குள் கேபிள் முடிச்சாக விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். முடிச்சு விழுந்த காரணத்தினால் உலோக கம்பியால் கேபிளை அகற்ற முடியாததால், மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர்.
தொடர்ந்து, சிறுவனின் உள்ளே சென்ற கேபிளை அளந்து பார்த்ததில், அந்த கேபிள் கிட்டதட்ட 70 செ.மீ உள்ளே சென்றுள்ளது. பதினைந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவ கண்காணிப்பில் இருந்த அந்த இளைஞன் நன்றாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)