Kissing Women Underwater: நீச்சல் அடிக்க சென்ற பெண்ணை நீருக்கடியில் முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்! நடந்தது என்ன?
மலேசியாவின் சபா மாநிலத்தில் நீருக்கடியில் சீன பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
மலேசியாவின் சபா மாநிலத்தில் நீருக்கடியில் சீன பெண் சுற்றுலாப் பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
24 வயதான சீன சுற்றுலாப் பயணி ஒருவர் நீருக்கடியில் தன்னைத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியதை அடுத்து, மலேசிய டைவிங் பயிற்றுவிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
உதவி கண்காணிப்பாளர் ஆரிப் அப்துல் ரசாக் இது குறித்து கூறுகையில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் சபா மாநிலத்தில் உள்ள செம்போர்னாவில் உள்ள நீர்நிலையில், நீருக்கு அடியில் நீந்திக்கொண்டிருந்த போது, 27 வயது டைவிங் பயிற்சியாளரால் அந்தப் பெண் துன்புறுத்தப்பட்டதாக பொறுப்பு அதிகாரி கூறினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அப்பெண்ணுக்கு நீருக்கு அடியில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. டைவிங் பயிற்றுவிப்பவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடல்களின் ஸ்கிரீன் ஷாட்களும் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும் கரை திரும்பிய பின் அந்த இளைஞர் அப்பெண்ணை we chat மூலம் தொடர்பு கொண்டு அவள் தங்கிருந்த ஹோட்டல் முகவரியை விசாரித்ததுடன், இரவு சந்திக்கலாமா என்று கேட்டதாகவும் அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அந்நபருக்கு எதிராக அவர் அளித்த புகாரின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் செம்போர்னா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.50 மணியளவில் நீர் கிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர் மீது குற்றவியல் சட்டம் 354-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக வரும் வியாழக்கிழமை வரை அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சபா மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிறிஸ்டினா லியூ இந்த சம்பவம் மாநிலத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்து இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க
OPS: இந்து மதத்தை இழிவுபடுத்துவதா..? கடும் நடவடிக்கை எடுத்திடுக..! ஓபிஎஸ் அறிக்கை வெளியீடு!