அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்: உரிய நீதி வழங்கப்பட்டுள்ளது - அதிபர் ஜோ பைடன்!
அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தேடப்பட்டு வரும் தீவிரவாதியான அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri), அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், நீதி வழங்கப்பட்டதாகவும் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் தனது தொலைக்காட்சி உரையில் தனது வழிக்காட்டுதலின்படி, கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூரில் அமெரிக்க ராணுவ படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார் என்று தெரிவித்தார்.
I made a promise to the American people that we’d continue to conduct effective counterterrorism operations in Afghanistan and beyond.
— President Biden (@POTUS) August 2, 2022
We have done that. pic.twitter.com/441YZJARMX
” தீவிரவாத தலைவர் கொலை செய்யப்பட்டார்; நீதி வழங்கப்பட்டது. அல்-கொய்தா தலைவர் உயிருடன் இல்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.
ரெட்டை கோபுர பயங்கரவாத தாகுக்குதலில் உயிரிழந்த 3000 குடும்பங்களுக்கு அல்-கொய்தா தலைவர் கொலை செய்யப்பட்டது உரிய நீதியாக கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காபூலில் நடந்த தாக்குதல் குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஒரு வீட்டின் பால்கனியில் இருந்த அய்மன் அல்-ஜவாஹிரி-ஐ இரண்டு Hellfire missiles மூலம் ஆளில்லா விமானம் மூலம் அவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
The United States continues to demonstrate our resolve and our capacity to defend the American people against those who seek to do us harm.
— President Biden (@POTUS) August 2, 2022
Tonight we made clear:
No matter how long it takes.
No matter where you try to hide.
We will find you.
இந்த ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் முன்பே வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது; இந்நிலையில், அமெரிக்க அதிபர் இதுகுறித்து விடீயோ ஒன்றை வெளியிட்டார்.
அய்மன் அல்-ஜவாஹிரிக்கு அல் கொய்தா இயக்க நிறுவனர் ஒசாமா பின் லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் என்று கண்டறியப்பட்டு, அதிமுக்கிய பங்கரவாதிகள் பட்டியலில் இணைத்து, அமெரிக்கப் படைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர் கொல்லப்பட்டுள்ளார்.
On Saturday, at my direction, the United States successfully conducted an airstrike in Kabul, Afghanistan that killed the emir of al-Qa’ida: Ayman al-Zawahiri.
— President Biden (@POTUS) August 1, 2022
Justice has been delivered.
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர்,11 அன்று நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஐய்மன் அல்-ஜவாஹிரி என்பது குறிப்பிடத்தக்கது.